நிபா வைரஸ், சமீபத்திய புதுப்பிப்புகள்: உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இப்போதுதான் உலகம் மெதுவாக மீண்டு வருகின்றது. கொரோனா உலகைஅ பாடாய் படுத்தி சற்று அடங்கி இருக்கும் நிலையில், அதைத் தொடர்ந்து பல வைரஸ் தொற்றுகள் உலக மக்களை அச்சுறுத்தியுள்ளன. அந்த வரிசையில் தற்போது நிபா வைரஸ் மீண்டும் தன் ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
நிபா வைரஸ் காரணமாக கேரளாவில் பீதி நிலவுகிறது. வியாழக்கிழமை நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 5 ஆவது நபர் பற்றி கண்டறியப்பட்டது. இவர் 24 வயதான சுகாதாரப் பணியாளர் என்பது தெரியவந்துள்ளது. இந்த நோயாளிகளின் தொடர்பு கொண்ட 700 பேரில், 77 பேர் அதிக ஆபத்து பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். தொடர்பில் இருந்த 700 பேரின் உடல்நிலையை அரசு கண்காணித்து வருகிறது. தொற்று பரவாமல் தடுக்க, கட்டுப்பாட்டு மண்டலத்தில் அவசர சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன.
நிபா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், “தொற்று பரவாமல் தடுக்க மாநில அரசு கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்கியுள்ளது. அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உள்ள நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தவிர, சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அரசின் விழிப்புணர்வு செய்திகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க | நிபா வைரஸ்: குறைவாக தொற்றும், அதிக உயிரை எடுக்கும் பங்களாதேஷ் மாறுபாடு
மாநிலம் முழுவதும் தொற்று நோய் பரவும் அபாயம்
கேரளாவில் நிபா வைரஸால் இரண்டு நோயாளிகள் இறந்துள்ளனர். டஹ்ற்போதைய நிலவரப்படி மொத்தம் 77 நோயாளிகள் அதிக ஆபத்துள்ள (ஹை ரிஸ்க்) நிலையில் இருப்பதை கருத்திக் கொண்டு, அரசாங்கம் விழிப்புடன் உள்ளது. மாநிலம் முழுவதும் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் அச்சம் தெரிவித்துள்ளார். தொற்றுநோயைத் தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிக ஆபத்துள்ள பிரிவில் உள்ளவர்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 700 பேருக்கும் சமூக இடைவெளியை பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
கேரளாவில் நிபா காய்ச்சல் பரவி வருவதால் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வியாழன் மற்றும் வெள்ளியன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை பற்றி கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் கீதா அறிவித்துள்ளார். அவர் தனது முகநூல் பதிவில், ‘கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு இரண்டு நாட்களிலும் ஆன்லைன் வகுப்புகளை ஏற்பாடு செய்யலாம்’ என்று கூறினார்.
எனினும், பல்கலைக்கழக பரீட்சை அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பீதியடைய தேவையில்லை: கேரள சுகாதாரத்துறை அமைச்சர்
மூளையை பாதிக்கும் இந்த வைரஸ் தாக்கம் குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது. முதல்வர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், நிலைமையை முழுமையாக ஆய்வு செய்து, "சாத்தியமான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது பீதி அடையத் தேவையில்லை” என்று வீணா ஜார்ஜ் கூறினார்.
WHO மற்றும் ICMR ஆய்வுகள் கோழிக்கோடு மட்டுமின்றி ஒட்டுமொத்த கேரள மாநிலமும் இத்தகைய நோய்த்தொற்றுகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளது என்று கண்டறிந்துள்ளன என்றும் அமைச்சர் கூறினார். காடுகளில் வசிக்கும் மக்கள் மிக அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
வில்லியப்பள்ளி பஞ்சாயத்தில் மூன்று மற்றும் வார்டுகள் மற்றும் புறமேரி பஞ்சாயத்தில் ஒன்று என கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மேலும் நான்கு வார்டுகள் செவ்வாய்கிழமை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன. இது தவிர செவ்வாயன்று சில வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.
மேலும் படிக்க | மீண்டும் நிபா... 2 பேர் உயிரிழப்பை உறுதிப்படுத்திய அரசு - அச்சத்தில் கேரளம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ