Oath Taking Ceremenony of PM Narendra Modi: சமீபத்தில் நடந்துமுடிந்த 2024 மக்களவைத் தேர்தல்களில் பாஜக தலைமையிலான எண்டிஏ கூட்டணி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. இதையடுத்து, பாஜக தலைவர் நரேந்திர மோடி, நாளை மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ளார். பிரதமரையும் அவரது புதிய அமைச்சரவையையும் வரவேற்க இந்தியாவே காத்துக்கொண்டு இருக்கின்றது. பதவியேற்பு விழா ஜூன் 9 ஆம் தேதி, அதாவது நாளை நடைபெறும். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வெற்றி பெற்றது. இதையடுத்து, பல ஆண்டுகளுக்கு பிறகு, இப்போது, நாட்டில் ஒரு கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. ​​இந்திய அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாளைய பதவியேற்பு நிகழ்ச்சி எப்படி இருக்கும்? யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி கிடைக்கும்? யாருக்கு எந்த அமைச்சரவை ஒதுக்கப்படும்? இப்படி பல கேள்விகள் உள்ளன. இவை அனைத்திற்கும் நாளை தொடங்கி வரும் நாட்களில் பதில் கிடைக்கும். 


சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மக்களவைத் தேர்தல் முடிவுகளின் படி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்றாவது முறையாக மோடி தலைமையிலான எண்டிஏ அரசு, மத்தியில் ஆட்சி அமைக்க தயாராகி வருகின்றது. 


பதவுயேற்பு விழா: நாள் மற்றும் நேரம்


ஜூன் 9, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழா வழக்கமான சம்பிரதாய முறைப்படி நடைபெற உள்ளது.


பதவியேற்பு விழா இந்திய பாரம்பரியம் மற்றும் அடையாளங்கள் நிறைந்த ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். புதிய அரசாங்கம் அமைப்பதை நாடு உற்சாகமாக எதிர்பார்க்கும் நிலையில் இந்த விழா அதற்கான ஒரு அடையாளச் சின்னமாக பார்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் சபையின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு ஜூன் 5 முதல் ஜூன் 9 வரை குடியரசுத் தலைவர் மாளிகை பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று குடியரசுத் தலைவரின் துணை செய்திச் செயலாளர் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.


மேலும் படிக்க | தென்னிந்தியாவில் ஒரு புதிய கதை எழுதிய NDA கூட்டணி: பிரதமர் மோடி


பதவியேற்பு விழாவை எங்கு பார்ப்பது? 


செய்தி சேனல்கள் பதவியேற்பு விழாவை நேரடியாக ஒளிபரப்பும். கூடுதலாக, இது YouTube மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் காணக் கிடைக்கும்.


பதவியேற்பு விழா: விருந்தினர் பட்டியல்


வார இறுதியில் நடைபெறவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு, இலங்கை, வங்கதேசம், பூடான், மாலத்தீவு உள்ளிட்ட பல அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கான வெளிநாட்டுத் தலைவர்களின் விருந்தினர் பட்டியல் முதன்மையாக புது தில்லியின் "அண்டை நாடுகளுக்கு முதலிடம்” என்ற கொள்கையின் அடிப்படையிலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முக்கியமானதாகக் கருதப்படும் தீவு நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் தயார் செய்யப்பட்டுள்ளது என்று அறியப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 293 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சிறப்புமிக்க முறையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கின்றது. நரேந்திர மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.


மேலும் படிக்க | 3வது முறையாக பிரதமராகும் மோடி: பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வரும் உலகத் தலைவர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ