தென்னிந்தியாவில் ஒரு புதிய கதை எழுதிய NDA கூட்டணி: பிரதமர் மோடி

டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 7, 2024, 05:52 PM IST
  • தென்னிந்தியாவில் புதிய அரசியலுக்கான அடித்தளத்தை தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்படுத்தியுள்ளது.
  • தென்னிந்தியாவில் ஒரு புதிய கதை எழுதிய என்டிஏ கூட்டணி.
  • EVM தொடர்பான எதிர் கட்சிகளின் குற்ற சாட்டு.
தென்னிந்தியாவில் ஒரு புதிய கதை எழுதிய NDA கூட்டணி: பிரதமர் மோடி title=

டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் உட்பட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் எம்பிக்களும், கூட்டணி கட்சி தலைவர்களும், பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்திய அரசியல் வரலாற்றில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணிதான் இந்தக் கூட்டணி என்று கூறினார். அரசாங்கத்தை நடத்துவதற்கு பெரும்பான்மை அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். ஏனென்றால் இதுதான் ஜனநாயக கொள்கை. அரசை நடத்த பெரும்பான்மை வலு போதும்... ஆனால், தேசத்தை வழிநடத்த ஒருமித்த கருத்து அவசியம். எங்களுக்கு பெரும்பான்மையை வழங்கியதன் மூலம் அரசாங்கத்தை நடத்துவதற்கான வாய்ப்பை எமக்கு வழங்கியுள்ளீர்கள் என்பதை இன்று நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகின்றேன். ஒருமித்த கருத்தைப் பெற முயற்சிப்பதும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் தவற விடாமல் இருப்பதும் நம் அனைவரின் பொறுப்பாகும்.

பாஜகவின் கடந்த 10 ஆண்டு ஆட்சி என்பது வெறும் டிரயிலர் தான். NDA புதிய இந்தியா New India, வளர்ச்சி இந்தியா (Developed India), லட்சியமிக்க இந்தியா (Aspired India) என தேசிய ஜனநாயக கூட்டணிக்கு புதிய விளக்கத்தை  அளித்த பிரதமர் மோடி, மேலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்றும் பிரதமர் மோடி சூளுரைத்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வெற்றிகரமான கூட்டணி என்று பிரதமர் மோடி மேலும் கூறினார். இந்த கூட்டணி நான்காவது முறையாக களமிறங்குகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி முதலில் தேசத்தின் உணர்விற்காக உருவாக்கப்பட்ட ஒரு குழு. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், பிரகாஷ் சிங் பாதல், பாலா சாகேப் தாக்கரே, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சரத் யாதவ் போன்ற தலைவர்களின் பங்களிப்பே தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்த உணர்வு. இவர்கள் விதைத்த விதைகளை, இன்று இந்திய மக்கள் நம்பிக்கையுடன் பெரும் மரமாக மாற்றியுள்ளனர். அத்தகைய தலைவர்களால் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

மேலும் படிக்க | ஜூன் 4 பங்குச்சந்தை வீழ்ந்த நாளிலும் இந்திய முதலீட்டாளர்களுக்கு லாபம் தான்! பியூஷ் கோயல் பதிலடி!

தேசிய ஜனநாயக கூட்டணி நல்லாட்சிகான கூட்டணி ஏழைகளின் நலனே கூட்டணி கட்சிகள் அனைவருக்கும் மையப் புள்ளியாக இருந்து வருகிறது. அரசு என்றால் என்ன, யாருக்காக அரசு, அரசு எப்படி செயல்படுகிறது என்பதை நாட்டு மக்கள் முதன்முறையாக அனுபவித்திருக்கிறார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில், நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி உத்தரவாதம் அளிக்கிறது என்றார். ஒன்றாக இணைந்து வளர்ந்த இந்தியாவின் கனவுகளை நனவாக்குவோம் என்றார்.

தென்னிந்தியாவில் ஒரு புதிய கதை எழுதிய என்டிஏ கூட்டணி

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தென்னிந்தியாவில் புதிய அரசியலுக்கான அடித்தளத்தை தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்படுத்தியுள்ளது என்றார். கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்பாடு வரலாற்று ரீதியாக மிக உயர்ந்ததாகும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணிக் கட்சியில் உள்ள பவன் கல்யாண் காற்று அல்ல புயல். இன்று தமிழகத்தில் தொகுதிகளை வெல்ல முடியாவிட்டாலும், தே.மு.தி.க.,வின் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ள வேகம், நாளை கட்சியின் எதிர்காலம் என்ன என்பதை தெளிவாக உணர்த்தி உள்ளது. நூற்றுக்கணக்கான நமது தொண்டர்கள் கட்சியின் வளர்ச்சிக்காக கேரளாவில் உயிர் தியாகம் செய்துள்ளனர்.  இந்தியாவின் அரசியல் வாழ்வில், ஒரே சித்தாந்தத்துடன் வாழும் மக்களுக்கு கேரளாவில் பெரும் அடக்குமுறைகள் நடந்துள்ளது. இது ஜம்மு காஷ்மீரில் நடந்த அடக்குமுறையை போன்றது. ஆனால் இதையும் மீறி இன்று முதல் முறையாக கேரளாவில் இருந்து நமது பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

EVM தொடர்பான எதிர் கட்சிகளின் குற்ற சாட்டு

அப்போது, ​​எதிர்க்கட்சிகளை குறிவைத்து பிரதமர் மோடி பேசினார். EVM இப்போது உயிருடன் இருக்கிறதா அல்லது இறந்துவிட்டதா என்று சொல்லுங்கள் என்று அவர் கூறினார். ஏனென்றால், இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் அதன் செயல்பாட்டின் மீது மக்களின் நம்பிக்கையை இழக்க வேண்டும் என எதிர் கட்சிகள் மக்களை குழப்புவதில் உறுதியாக இருந்தனர். இவர்கள் தொடர்ந்து EVM பற்றி தவறாக பேசி வந்தனர். ஆனால் ஜூன் 4 அன்று, EVM அவரை அமைதிப்படுத்தியது. இதுதான் இந்திய ஜனநாயகத்தின் பலம். இதுவே இந்தியாவின் பாரபட்சமற்ற தன்மையின் பலம். இதுதான் இந்திய தேர்தல் ஆணையத்தின் பலம்.

மேலும் படிக்க | அக்னி வீரர் திட்டம் முதல் UCC வரை... நிதீஷ் குமார் வைக்கும் சில கோரிக்கைகள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News