அடல்பிஹாரி வாஜ்பாய் நினைவு நாளான இன்று பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார் மோடி...!!
அடல் பிஹாரி வ்வாஜ்பாயின் புண்ய திதியில், அவருக்கு எனது அஞ்சலி என அரிய புகைப்படங்களின் தொகுப்பை வீடியோவாக டிவீட் செய்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி
அடல் பிஹாரி வாஜ்பாயின் இரண்டாவது நினைவு நாளான இன்று, பிரதமர் மோடி, அவரது நினைவாக முக்கியமான சில படங்களின் படத்தொகுப்பை ட்வீட் செய்துள்ளார்
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயை தனது இரண்டாவது நினைவு நாளில், அவரை நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று பழைய படங்கள் மற்றும் வீடியோக்களை திரட்டி தொகுப்பாக வெளியிட்டுள்ளார், வீடியோவில் பிரதமர் மோடியின் குரல் பதிவுடன் கிட்டத்தட்ட இரண்டு நிமிட நீளமுள்ள வீடியோவில், வாஜ்பாய் அவர்களின் நீண்டகால அரசியல் வாழ்க்கையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளது.
“இந்த நாடு அடல் ஜியின் தியாகத்தை ஒருபோதும் மறக்காது. அவரது தலைமையின் கீழ், இந்தியா ஒரு அணுசக்தியாக உருவெடுத்தது. ஒரு அரசியல்வாதி, நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், பிரதமர் என்ற முறையில் அடல் ஜி பல விதமான பொறுப்புக்களை மிகச் சிறப்பாக நிர்வகித்துள்ளார். அவரது உரைகள் மிகவும் பிரபலமானவை. அவர் பாராளுமன்றத்திலும், அதிகம் பேச மாட்டார். அவரது மவுனமே பல செய்திகளை மக்களுக்கு எடுரைக்கும். " என பிரதமர் மோடி அந்த வீடியோவில் சொல்வதைக் கேட்கலாம்.
ALSO READ | COVID-19 Vaccine தயாரிப்பை தொடங்கியுள்ள ரஷ்யா.. சந்தேகத்தை கிளப்பும் விஞ்ஞானிகள்..!!!
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், குடியரசுத்துணைத் தலைவர் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினர்.
நாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், பாரதீய ஜனதா கட்சியின் நிறுவக உறுப்பினருமான வாஜ்பாய், தனது 93 வது வயதில் ஆகஸ்ட் 16, 2018 அன்று, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) இறந்தார். அவர் நீண்ட காலமாக நோய்வாய் பட்டிருந்தார்.
1998-2004 வரை தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வழிநடத்திய வாஜ்பாய், பாஜகவில் இருந்து நாட்டின் பிரதமராக பதவியேற்ற முதல் தலைவர் ஆவார். வாஜ்பாய் மூன்று முறை பிரதமராக பணியாற்றினார். 1996 இல் மிக குறைவான காலத்திற்கும், பின்னர் 1998 மற்றும் 2004 க்கு இடையில் இரண்டு முறை பிரதமராக பதவியில் இருந்துள்ளார்.
ALSO READ | ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும்: PM Modi
Atal Bihari Vajpayee பிறந்த நாளான டிசம்பர் 25 ஆம் தேதி வரு 'நல்லாட்சி தினமாக' பாரதீய ஜனதா கட்சி கொண்டாடுகிறது. அவர் 2014 இல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.