ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும்: PM Modi

ஜம்மு-காஷ்மீரில் அடுத்து என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, விரைவில் மாநிலத்திற்கு முதல்வர், எம்.எல்.ஏ.க்கள் கிடைப்பார்கள் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார்.

Updated: Aug 15, 2020, 06:35 PM IST
ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும்: PM Modi

ஜம்மு-காஷ்மீரில் அடுத்து என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, "தற்போது ஜம்மு-காஷ்மீரில் தொகுதிகளை வரையறுக்கும் செயல்முறை நடந்து வருகிறது. இதற்கான பணிகள் முடிந்தவுடன் தேர்தல் நடைபெறும்" என்று செங்கோட்டையில் இருந்து பிரதமர் மோடி அறிவித்தார்.

புதுடெல்லி (New Delhi) : பிரதமர் நரேந்திர மோடி, 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டைyஇல் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார். ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து தனது அரசு உறுதியுடன் இருப்பதாக கூறினார். 

தற்போது நடைபெற்று வரும் தொகுதி மறுவரையறை செயல்முறை முடிவுக்கு வந்தவுடன் யூனியன் பிரதேசத்தில் தேர்தல்கள் நடைபெறும் என்று பிரதமர் கூறினார்.

ALSO READ | சுதந்திர தின வரலாற்றில் முதல் முறையாக நயாகரா நீர்வீழ்ச்சியில் மூவர்ண கொடி பறக்கும்..!!!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கபப்ட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கும் வகையில் அரசியலமைப்பின் 370 வது பிரிவை அரசு ரத்து செய்தது. இதனால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீங்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

370 வது பிரிவை ரத்து செய்வது மிகவும் யோசித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று பிரதமர் மேலும் விவரித்தார், 2020 ஆம் ஆண்டு  ஜம்மு-காஷ்மீரில் புதிய வளர்ச்சி பயணத்தின் ஆண்டாக இருக்கும் என்றும் கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் பெண்கள் மற்றும் தலித்துகள்  உரிமைகளை பெற்ற ஆண்டு இது எனக் கூறினார். மேலும், இந்த ஆண்டு ஜம்முகாஷ்மீர்  அகதிகளுக்கு கவுரவமான வாழ்க்கையை அளிக்கும் ஆண்டு என்று பிரதமர் தனது தொடர்ச்சியான ஏழாவது சுதந்திர தின உரையில் கூறினார்.

பாஜக, தனது கூட்டணி கட்சியாக இருந்த மெஹபூபா முப்தியின் பிடிபியுடனான கூட்டணியில் இருந்து 2018 ஜூன் மாதம் விலகியது. அதற்கு பிறகு அங்கு மாநில அரசு கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி  நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், சென்ற ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி, மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முப்தி உடபட பல முக்கிய அரசியல்வாதிகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். 

ALSO READ | வான்வெளிக் காவலன்: DRDO தாயரித்துள்ள ஆண்டி-ட்ரோன் அமைப்பின் சிறப்பு அம்சங்கள்

முப்தி உட்பட பல தலைவர்கள் தொடர்ந்து வீட்டுக்காவலில் நிலையில், முன்னாள் முதலமைச்சர்கள் பாரூக், உமர் அப்துல்லா உள்ளிட்ட பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு ஜாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மீட்கப்படும் வரை எந்தவொரு சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று ஒமர் அப்துல்லா சமீபத்தில் ‘சபதம் செய்துள்ளார்.