74வது சுதந்திர தினம்: குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவர்களை நினைவு கூர்ந்தார்.
நாட்டில் கொரொனா நெருக்கடியை சமாளிப்பதில் பெரும் பங்காற்றி வரும், தொடர்ந்து தஙக்ள் சேவையை வழங்கி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு, நாடு கடமைப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
நாட்டின் எல்லையை பாதுகாப்பதில், தங்கள் விலை மதிப்பில்லாத உயிரை தியாகம் செய்துள்ள வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார். நமது நாடு இராணுவத்தை நினைத்து பெருமை கொள்கிறது என்றும் கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஒவ்வொரு இந்தியரும் கடமைபட்டுள்ளார் என்றார்.
ALSO READ | சுதந்திர தின வரலாற்றில் முதல் முறையாக நயாகரா நீர்வீழ்ச்சியில் மூவர்ண கொடி பறக்கும்..!!!
கொரோனா தொற்று நோயை கையாளவதில், உலக நாடுகளுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியதன் மூலம், இந்தியா நெருக்கடி காலத்திலும் உலகிற்கு துணை நிற்கும் என்பதை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது என்றார்.
ஐநா சபையில் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு, இந்தியாவிற்கு கிடைத்துள்ள உலகளாவிய ஆதரவு, அதன் செல்வாக்கை நிரூபிக்கிறது என்றார்.
ராம் ஜென்ம பூமி பிரச்சனை சுமுகமாக தீர்க்கப்பட்டு, அனைத்து தரப்பினரும் அதனை உளமாற ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன் மூலம் அமைதி, நல்லிணக்கம், அஹிம்சை ஆகியவற்றின் மீது நம்பிக்கை உள்ள நாடு இந்தியா என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்த கொரோனா நெருக்கடி காலத்தில், பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் மூலம், வேலை இழந்த வாழ்வாதாரத்தை இழந்த, இடம்பெயர்ந்த மக்களுக்கு, அரசு உதவி அளித்துள்ளது என்றார்.
ALSO READ | ஆயுஷ்மான் பாரத்: ஏழைகளுக்கு மட்டுமல்ல நடுத்தர வர்க்கத்துக்கும் ஆபத்பாந்தவன் தான்..!!
கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வர விரும்பிய இந்தியர்கள், வந்தே பாரத் மிஷன் மூலம் தாய் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் என்றார்.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், தாய்மொழி வாயிலாக குழந்தைகள் கற்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள் சிறந்த முறையில் கற்க இயலும் என்றார்.
2020 ஒரு சவாலான ஆண்டாக இருந்து வந்துள்ளது. கண்ணுக்கு தெரியாத வைரஸ் நம் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. இதன் மூலம் மனித குலத்திற்கு, இயற்கை பல பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. அதை நாம் உணர்ந்து நமது தவறுகளை திருத்திக் கொண்டு, இயற்கையை மதித்து, அதனை பாதுகாக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
ALSO READ | வருமான வரி: விமான டிக்கெட், நகை வாங்குதல், கல்வி தொடர்பான புதிய விதிகள்..!!!
இந்த கொரோனா நெருக்கடி காலத்தில், தகவல் தொழில்நுட்பம் மூலம், நிர்வக, கல்வி , வர்த்தகம், அலுவலக பணிகள் ஆகியவற்றை தொடருவது சாத்தியமானது என்றார்.
நாட்டு மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி, வளமான வாழ்வு வாழ வேண்டும் என்றார்.
ALSO READ | சுதந்திர தினம் 2020: மூவர்ண கொடி தொடர்பான அரிய தகவல்கள்