வருமான வரி: விமான டிக்கெட், நகை வாங்குதல், கல்வி தொடர்பான புதிய விதிகள்..!!!

வரி வசூலை அதிகரிக்க மத்திய அரசு கொண்டுவர உள்ள புதிய விதிகளைப்பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Written by - ZEE Bureau | Last Updated : Aug 14, 2020, 01:46 PM IST
  • ₹ 1 லட்சத்துக்கு மேல் நகைகள், மின்சாதன பொருட்கள், ஓவியங்கள், பளிங்கு போன்றவற்றை வாங்கினால், வருமான வரியிடம் தெரிவிக்க வேண்டும்.
  • வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு அதிக விகிதத்தில் சம்பளத்தில் இருந்து வரியை பிடித்துக் கொள்ளவது குறித்த யோசனையையும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
  • பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவித்து ஊக்கம் அளிக்கும் வகையில், Honoring the Honest என்னும் திட்டத்தை நேற்று தொடக்கி வைத்தார்.
வருமான வரி: விமான டிக்கெட், நகை வாங்குதல், கல்வி தொடர்பான புதிய விதிகள்..!!!

வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில்  நிதி அமைச்சகம் சில யோசனைகளை முன்மொழிந்துள்ளது.

20,000 ரூபாய்க்கு மேல் ஹோட்டல் பில்கள், 1 லட்சத்துக்கும் அதிகமான கல்வி கட்டணம், மின்சார பில் போன்ற பரிவர்த்தனைகள் மேற்கொண்டால் இனி வருமான வரித்துறையிடன்  தகவல் அளிக்க வேண்டும் என்ற புதிய விதியை அரசு கொண்டு வர உள்ளது.

புதுடில்லி: வரி வசூலை அதிகரிக்க அரசு தொடர்ச்சியாக பல  நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், சில புதிய நடவடிக்கைகளை அரசு முன்மொழிந்துள்ளது. அதாவது ₹ 20,000 க்கு மேல் உள்ள ஹோட்டல் பில்கள், மருத்துவக்காப்பீட்டு ப்ரீமியம், விமான டிக்கெட்டுகள், ₹ 1,00,000 திற்கு மேல் நகைகள் வாங்குவது போன்ற பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை இனி வருமான வரித் துறையிடம் வழங்க வெண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவித்து ஊக்கம் அளிக்கும் வகையில், Honoring the Honest என்னும் திட்டத்தை நேற்று தொடக்கி வைத்தார்.  இது வருமான வரித்துறை மேற்கொள்ளப்படும் மிக முக்கிய சீர்திருத்தமாக கருதப்படுகிறது.

ALSO READ | பெயரிலி வருமான வரி கணக்கீட்டு திட்டம்: அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

வருமான வரி தொடர்பான நடவடிக்கையில், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த புதிய நடவடிக்கைகளையும் நிதி அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. அதன் கீழ் கண்ட பரிவர்த்தனைகள் குறித்தும் வருமான வரி துறையிடம் தகவல் அளிக்க வேண்டும்:

1. கல்வி தொடர்பான கட்டணம் மற்றும் நன்கொடைகள் ஒரு வருடத்தில் ரூபாய் 1 லட்சத்துக்கு மேல்

2. ஒரு வருடத்தில் ரூபாய்1 லட்சத்துக்கும் அதிகமான மின்சார பில்

3. பிஸினல் க்ளாஸில் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு விமான பயணம் அல்லது வெளிநாட்டு பயணம்

4. ரூபாய் 20,000 க்கு மேல் உள்ள ஹோட்டல் பில்கள்

5. ₹ 1 லட்சத்துக்கு மேல் நகைகள், மின்சாதன பொருட்கள், ஓவியங்கள், பளிங்கு போன்றவற்றை வாங்குவது

6. 50 லட்சத்துக்கு மேல் வங்கியின் உள்ள நடப்பு கணக்கில் வைப்பு அல்லது வரவு

7. நடப்பு கணக்கு அல்லாத பிற வங்கி கணக்கில், 25 லட்சத்துக்கு  வைப்பு அல்லது வரவு

8. ஆண்டுக்கு ₹ 20,000 க்கு மேல் சொத்து வரி செலுத்துதல்

9.ஆயுள் காப்பீட்டு பிரீமியம் ரூபாய் 50,000 க்கு மேல்

10. ரூபாய் 20,000 க்கு மேலான மருத்துவ காப்பீட்டு பிரீமியம்

11) பங்கு பரிவர்த்தனைகள், டிமேட் கணக்கு, வங்கி லாக்கர்கள்

ALSO READ | Aadhaar - Pan Card இணைக்க வில்லை என்றால்.. உங்கள் பான் கார்டு செயலாற்றதாகிவிடும்

தவிர, வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு அதிக விகிதத்தில் சம்பளத்தில் இருந்து வரியை பிடித்துக் கொள்ளவது குறித்த யோசனையையும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. 30 லட்சத்திற்கு மேல் வங்கி பரிவர்த்தனை வைத்திருப்பவர்கள், அனைத்து தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகர்கள், 50 லட்சத்துக்கும் அதிகமான வருவாய் உள்ளவர்கள் மற்றும் 40,000 டாலருக்கு மேல் வாடகை செலுத்துபவர்கள், வருமான வரி தாக்கலை கட்டாயமாக்குவதற்கான திட்டமும் உள்ளது.

More Stories

Trending News