புதுடெல்லி: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் நாளை காலை 10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனையில் ஈடுபடுகிறார். டெல்லி மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழக முதல்வரும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை எந்தெந்த மாநில முதல்வர்கள் கலந்துக்கொள்வார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாளை நடைபெறவுள்ள அவசர ஆலோசனையில் பிரதமர் மோடி (Narendra Modi), நாளை காலை 9 மணிக்கு கோவிட் -19 தொடர்பான நிலைமையை மதிப்பாய்வு செய்வார். காலை 10 மணிக்கு, அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் கோவிட் -19 நிலைமை குறித்து அந்தந்த மாநில முதல்வர்களுடன் உரையாட்டுவார். மதியம் 12:30 மணிக்கு, நாட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களுடன் சந்திப்பை நடத்துவார். இந்த அனைத்து ஆலோசனைகளும் காணொளி வாயிலாக நடைபெறும். 


கோவிட் -19 இன் கொடிய தொற்றின் இரண்டாவது அலையில் நாட்டில் பெருகிவரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு மத்தியில் மருத்துவமனைகள் எதிர்கொள்ளும் ஆக்ஸிஜன் சப்ளை பற்றாக்குறையை மறுஆய்வு செய்வதற்கான உயர் மட்டக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார்.


ALSO READ |  மருத்துவ Oxygen ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு செல்ல தடை போடக்கூடாது


இந்த ஆலோசனை கூட்டத்தில் "பல அம்சங்கள் குறித்கும், கொரோனா நோயைக் கட்டுப்படுத்த விரைவாக செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து உயர் மட்டக் கூட்டத்தில் பிரதமர் பேசினார். ஆக்ஸிஜனின் உற்பத்தியை அதிகரித்தல், அதை விநியோகம் வேகத்தை அதிகரித்தல் மற்றும் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் (Oxygen Cylinder Supply) சப்ளையை வழங்க புதுமையான வழிகளைப் பயன்படுத்துதல்" போன்றவற்றை குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக பிரதம மந்திரி அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில், "அமைச்சரவை செயலாளர், பிரதமரின் முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதார செயலாளர் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் அதிகாரிகள், சாலை போக்குவரத்து, மருந்துகள் மற்றும் நிதி ஆயோக் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


ALSO READ |  கடன் வாங்குவீர்களோ, பிச்சை எடுப்பீர்களோ, நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க வேண்டும்: HC காட்டம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR