புது டெல்லி: லடாக் (Ladakh) எல்லையில் சீனாவுடனான பதற்றங்களுக்கு மத்தியில், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் (Pakistan Army) ராணுவத்தின் மோசமான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. பூஞ்ச் மாவட்டத்தின் மான்கோட் துறையில் காலை 6:30 மணி அளவி பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மிகப்பெரிய ஷெல் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் வீரர்கள் மோட்டார் மற்றும் கனரக ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடும் நடத்தினார்கள். இதற்கு முன்பும் கடந்த காலங்களில் பல முறை பாகிஸ்தான் (Pakistan) போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திங்களன்று, எல்.ஓ.சிக்கு (Line of Control) அருகிலுள்ள யூரியின் குடியிருப்பு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஷெல் தாக்கல் நடத்தியது. அதோடு, தரத்கோட் கிராமத்தில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டையும் பாகிஸ்தான் ராணுவம் நடத்தியது. ஒரு வீட்டின் கூரையில் ஷெல் விழுந்ததில், கூரையின் பெரும்பகுதி சேதமடைந்தது. ஆனால் ஏற்காணவே வீட்டில் இருந்த குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்களை ராணுவ வீரர்கள் (Indian Army) பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்ததால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. பாகிஸ்தானின் துப்பாக்கிச் சூட்டில் தரட்கோட் கிராமத்தின் 8 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.


Read | காஷ்மீரில் வன்முறை ஒருபோதும் வெல்லாது: ராகுல் காந்தி ஓபன் டாக்


உரி பகுதியின் குடியிருப்பு பகுதிகளில், நீண்ட காலத்திற்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. கட்டுப்பாட்டு எல்லைக்கு அப்பால் இருந்து இதுவரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆனால் இந்த முறை பாகிஸ்தான் துருப்புக்கள் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தின. இந்தியாவும் (Indian Army) அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கிறது.


உரியைத் தவிர, பிற பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர்நிறுத்த உடன்பாட்டை மீறி வருகிறது. இதற்கிடையில், பள்ளத்தாக்கில் பயங்கரவாத சம்பவங்கள் மீண்டும் வேகம் பெற்றுள்ளன. பள்ளத்தாக்குப் பகுதியில் குழப்பம் ஏற்படுத்த பயங்கரவாதிகள் புதிய சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.


வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில், மிகப் பெரிய சதித்திட்டத்தை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர். காவல்துறையும் ராணுவமும் இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில், பயங்கரவாதிகளின் பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டு, பல திட்டங்கள் முறியடிக்கப்பட்டன. ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கெரான் துறையில் பயங்கரவாத மறைவிடம் இருப்பது கண்டறியப்பட்டு, ஏராளமான ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டன.


Read | "இது 1962 ஆம் ஆண்டு இந்தியா அல்ல" இருதரப்பு பேச்சுவார்த்தை தொடர்கிறது : ராஜ்நாத் சிங்


ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் ஐந்து, 15 மேகஸின்கள், 443 தோட்டாக்கள், 2-யுபிஜிஎல் ஏவுகணைகள், 57-யுபிஜிஎல் கையெறி குண்டுகள், ஆறு 9-மிமீ கைத்துப்பாக்கிகள், 9 மி.மீ கைத்துப்பாக்கிகள் கொண்ட 12 மேகஜின்கள் மற்றும் 15 கையெறிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பயங்கரவாத அமைப்பிற்காக சில நாட்களுக்கு முன்பு எல்லையைத் தாண்டி, இந்த ஆயுதங்கள் அனுப்பப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆயுதங்கள் எப்போது கொண்டு வரப்பட்டன என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


கடந்த சில நாட்களாக, பாரமுல்லா மற்றும் குப்வாராவின் கெரான் துறைகளில் போர்நிறுத்த உடன்பாட்டை மீறும் பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவத்தின் நிலைகளை குறிவைத்து தாக்குகிறது. ஏராளமான பயங்கரவாதிகள் எல்லையை கடக்க முயற்சிப்பதாகவும் நம்பப்படுகிறது. ஆனால் எல்லைகளில் தீவிர கண்காணிப்பு இருப்பதால், இதுவரை எந்த ஊடுருவல் முயற்சியும் வெற்றிபெறவில்லை. குப்வாராவில் கனரக ஆயுதங்களை கைப்பற்றியதன் மூலம் மிகப்பெரிய பயங்கரவாத சம்பவத்தையும் தடுப்பதில் இந்திய ராணுவம் (Indian Army) வெற்றி பெற்றுள்ளது.


(மொழியாக்கம்: மாலதி தமிழ்ச்செல்வன்)