விமானத்தைப் போல ரயிலிலும் பயணிகளின் பொருட்களுக்கு கட்டணம் வசூலிப்பு ?
Passenger Luggage Cost : விமானத்தைப் போலவே ரயிலில் பயணம் செல்பவர்களின் பொருட்களுக்கும் கட்டணம் வசூல். எந்தெந்த பொருட்கள் எத்தனை கிலோ அனுமதி ?
முதலில் விமானங்களின் எடுத்துச்செல்லும் உடைமை விவரங்களை பார்க்கலாம்.
விமான நிலையங்களைப் பொறுத்தவரை அந்தந்த நிறுவனங்களின் சொந்த முடிவுகளைப் பொறுத்து விலை மாறுபடுகிறது. எடுத்துச்செல்லும் பொருட்களின் எடை அளவும் மாறுபடுகிறது. எனவே, அதனை இறுதியிட்டுச் சொல்ல முடிவதில்லை. ஏர்-இந்தியா உள்நாட்டுச் சேவையில் பயணம் செய்யும் பயணிகள் 25 கிலோ எடை வரையுள்ள தங்களது உடைமைகளை இலவசமாக எடுத்துச் செல்லலாம். ஆனால், இண்டிகோ விமானத்தில் 15 கிலோ வரை மட்டுமே அனுமதி.
மேலும் படிக்க | ரயிலில் லக்கேஜ் கொண்டு செல்வோர் கவனத்திற்கு! விதிகள் மாற்றம்!
அதுவும், கையில் எடுத்துச்செல்லும் பேக்-கின் எடை 7 கிலோ மட்டுமே இருக்க வேண்டும். இந்தக் கட்டண விவரங்கள் உள்நாட்டு விமான சேவையின் விதிகள். அதாவது, இந்தியாவுக்குள்ளேயே நாம் பயணிக்கிறோம் என்றால் அதற்கான விதிமுறையின் கட்டண விபரங்கள் இவை. இதே, வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றால், பயணிகளின் உடைமைகளின் எடை மற்றும் அளவுக்கு ஏற்றவாறு கட்டணம் மாறுபடுகிறது.
ரயில் போக்குவரத்துப் பயணத்தில், ஏசி முதல் வகுப்பு ரயிலில் 70 கிலோ வரை பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. ஏசி 2ம் வகுப்பில் 50 கிலோ வரை எடுத்துச் செல்லலாம். மூன்றாம் வகுப்பு ஸ்லீப்பர் க்ளாசில் 40 கிலோ வரை உடைமைகளை எடுத்துச் செல்லலாம். இரண்டாம் வகுப்பான செகண்ட் க்ளாசில் 25 கிலோ வரை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். இந்த உடைமைகளை முன்பதிவு வேறு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்படி உடைமைகளை முன்பதிவு செய்யாமல் எடுத்துச் சென்றால் 6 மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தால் ஒன்றரை மடங்கு அளவு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இன்னும் சில கடுமைகளையும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, பேக்கிங் சரியாக இல்லையென்றாலும் எடுத்துச்செல்ல அனுமதி அளிப்பதில்லை. எந்த உடைமைகளாக இருந்தாலும் ரயில் செல்வதற்கு அரை மணி நேரம் முன்னதாகவே வந்துவிட வேண்டும். இல்லையென்றால், அதற்கு அபராதம் விதிக்கிறது ரயில்வே.!
பேருந்து பயணத்தைப் பொறுத்தவரை, ஒரு பயணி எந்தவித கட்டணமும் இல்லாமல் அரசுப் பேருந்துகளில் 20கிலோ வரை பொருட்களை எடுத்துச் செல்லலாம். இந்த கட்டண விதிமுறை மாநிலங்களுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. தமிழகத்தில் 20 கிலோ வரை எடுத்துச்செல்ல அனுமதி இருக்கும் நிலையில், கேரள அரசுப் பேருந்துகளில் 30 கிலோ வரை எடுத்துச்செல்லலாம். கூடுதல் பொருட்களுக்கு எடைக்கு ஏற்றவாறு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ”பாரத மாதா தூக்கில் தொங்க வேண்டும்” - பம்முகிறதா பா.ஜ.க?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR