பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, மிகப்பெரிய அளவில் மேற்கொண்ட விதிமீறல்கள் நடவடிக்கை எடுத்து, மத்திய ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு, paytm வங்கியின் செயல்பாட்டிற்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதை எடுத்து பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி முதல், பேடிஎம் பேமெண்ட் வங்கியின் செயல்பாடு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் இதற்கான காலக்கெடு தற்போது மார்ச் மாதம் 15 ஆம் தேதி என நீட்டிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேடிஎம் பேமென்ட் வங்கியின் தலைவர் ராஜினாமா


Paytm வங்கி, கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அதன் தலைவர் சேகர் சர்மா ராஜினாமா செய்து கொள்ள. மேலும் பேடிஎம் பேமெண்ட் வாங்கியின் குழுவில் இருந்தும், அவர் விலகியுள்ளார். முன்னதாக வீட்டில் வங்கி தலைவர் பதவியில் இருந்து விலக, நிறுவனர் விஜய் ஷர்மா முடிவு செய்ததாக, பேட்டியம் திங்கட்கிழமை தெரிவித்தது. ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை காரணமாக, பேடிஎம் வங்கி அச்சுறுத்தலை சந்தித்து வரும் நிலையில், வங்கியின் மிகப்பெரிய பங்குதாரரான, விஜய் சேகர் சர்மா விலகி உள்ளார்.


புதிதாக நியமிக்கப்பட்டுள்ள போர்ட் உறுப்பினர்கள்


விஜய் ஷர்மாவின் ராஜினாமாவிற்கு பிறகு பேடிஎம் பேமெண்ட் வங்கியின் போர்ட் உறுப்பினர்கள், புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் ஸ்ரீதர், இயக்குனர் குழுவின் உறுப்பினராக இருப்பார். இது தவிர, பேங்க் ஆப் பரோடா அங்கே என் முன்னாள் நிர்வாக இயக்குனர் அசோக் குமார், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி, தேவேந்திர நாத் சாரங்கி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரஜினி  சிபில் ஆகியோர் குழு உறுப்பினராக இருப்பார்கள் என கூறப்படுகிறது.


பேடிஎம் பேமெண்ட் வங்கி தொடர்பான ஆர்பிஐயின் புதிய வழிகாட்டுதல்கள்


Paytm பேமெண்ட் வங்கி தொடர்பாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில், மார்ச் 15 க்கு பிறகு பேடிஎம் பேமெண்ட் வாங்கி இயங்காது எனவும், பேடிஎம் சேவையை தொடர்ந்து பெற வேண்டுமானால், அதனை வாடிக்கையாளர்களும் வணிகர்களும், தங்கள் பேடிஎம் யுபிஐ  கணக்கை வேறு ஏதேனும் ஒரு வங்கியுடன் இணைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான 197 கம்யூனிகேஷன் லிமிடெட், சில வங்கிகளுடன் இணைந்துள்ளது.


மேலும் படிக்க | Paytm FASTagல் இருக்கும் இருப்பைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்! விளக்கம் சொல்லும் பேடிஎம்!


Paytm வழங்கும் UPI சேவை


அதே நேரத்தில், Paytm வழங்கும் UPI சேவையை பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் செயல்பாட்டை மேற்பார்வையிடும் அமைப்பான NPCI நிறுவனத்தை RBI கேட்டுக் கொண்டுள்ளது.  Paytm செயலி மூலம் கிடைக்கும் சேவையை தொடர்ந்து வழங்க, அதிக அளவு UPI பரிவர்த்தனைகளை கையாளும் திறன் கொண்ட வங்கிகளுக்கு பேமெண்ட் சேவை வழங்க அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ்  வங்கி கூறியது. 


Axis வங்கியுடன் இணைந்து பணியாற்ற பேடிஎம் விண்ணப்பம்


Paytm, Axis வங்கியுடன் இணைந்து, மூன்றாம் தரப்பு UPI செயலி சேவை வழங்குநராக செயல்பட NPCI க்கு விண்ணப்பித்திருந்தது. நாடு முழுவதும் உள்ள UPI பரிவர்த்தனைகளை NCPI இயக்கி கண்காணிக்கிறது. UPI அமைப்பில் மூன்றாம் தரப்பு விண்ணப்ப வழங்குநராக ஆவதற்கு One 97 Communications Ltd விடுத்துள்ள கோரிக்கையை மதிப்பாய்வு செய்யும்படி NPCI ஐ RBI கேட்டுக் கொண்டுள்ளது.  Paytm Payments வங்கி மூலம் UPI பரிவர்த்தனைகள் நடப்பதால், Paytm தற்போது மூன்றாம் தரப்பு UPI செயலி (Third Party Application Providers - TPAP) என வகைப்படுத்தப்படவில்லை. மறுபுறம், Amazon Pay, Google Pay, Mobikwik, PhonePe மற்றும் WhatsApp உள்ளிட்ட 22 நிறுவனங்கள் தற்போது TPAP உரிமங்களைக் கொண்டுள்ளன.


மேலும் படிக்க | EPFO Update: EPS உறுப்பினர்களுக்கு வெளியிடப்பட்ட முக்கிய சுற்றறிக்கை: வெளியான வழிகாட்டுதல்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ