EPFO Update: EPS உறுப்பினர்களுக்கு வெளியிடப்பட்ட முக்கிய சுற்றறிக்கை: வெளியான வழிகாட்டுதல்கள்

EPFO Update: சமீபத்திய சுற்றறிக்கையில், பல கணக்கு எண்களைக் கொண்ட இபிஎஃப்ஓ உறுப்பினர்களின் ஊழியர் ஓய்வூதியத் திட்ட (Employee Pension Scheme) உரிமையை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 1, 2024, 04:46 PM IST
  • இபிஎஃப் சந்தாதாரரா நீங்கள்?
  • அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது.
  • ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
EPFO Update: EPS உறுப்பினர்களுக்கு வெளியிடப்பட்ட முக்கிய சுற்றறிக்கை: வெளியான வழிகாட்டுதல்கள் title=

EPFO Update: இபிஎஃப் சந்தாதாரரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த சமீபத்திய சுற்றறிக்கையில், பல கணக்கு எண்களைக் கொண்ட இபிஎஃப்ஓ உறுப்பினர்களின் ஊழியர் ஓய்வூதியத் திட்ட (Employee Pension Scheme) உரிமையை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுள்ளன. 

EPFO சுற்றறிக்கை (EPFO Circular) 

இந்த சுற்றறிக்கையில் வந்துள்ள வழிகாட்டுதல்கள் (Guidelines), க்ளெயிம் செயல்முறையை சீரமைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளன. பல முறை ஒரு உறுப்பினர் பல கணக்குகளை வைத்திருப்பதால், பங்களித்த தொகை மாறுபடும். இதனால் தொகையை கணக்கிடும் போது சிக்கல் ஏற்படுகிறது. இந்த சிக்கல்களை சரி செய்ய இந்த வழிகாட்டுதல்கள் உதவும்.

இந்த சுற்றறிக்கை திங்களன்று வெளியிடப்பட்டது. இதில் EPS உறுப்பினர், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களில் ஒரே நேரத்தில் பணிபுரிந்து, ஒரே நேரத்தில் வேலைக்காக பல பிஎஃப் கணக்கு (PF Account) எண்களை வைத்திருந்தால், உண்மையான வெளியேறும் தேதியின் அடிப்படையில் ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் ஓய்வூதியம் கணக்கிடப்படும். மேலும் அனைத்து நிறுவனங்களிலிருந்தும் செலுத்தபட வேண்டிய தொகை ஒருங்கிணைக்கப்படும்.

"எந்த நேரத்திலும் ஒட்டுமொத்த ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் ஊதிய உச்சவரம்பைத் தாண்டக்கூடாது. மேலும் அது ஊதிய உச்சவரம்பை மீறும் போது, அத்தகைய கூடுதல் சம்பளத்தில் பெறப்பட்ட பங்களிப்பு வருங்கால வைப்பு நிதிக் கணக்கிற்கு மாற்றப்படும். மற்றும் மொத்த ஓய்வூதியத் தொகையில் மட்டுமே குறைந்தபட்ச ஓய்வூதிய விதிகள் பொருந்தும்.” என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தனிநபர் கடன் வாங்க போறீங்களா... பல்வேறு வங்கிகளில் வட்டி & EMI விபரங்கள்!

மேலும், சமூகப் பாதுகாப்பு அமைப்பின் பிராந்திய அலுவலர்கள், தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட பல நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களின் மொத்த பங்களிப்புகள் மாத ஊதிய உச்சவரம்பான ரூ.15,000 இல் செலுத்த வேண்டிய பங்களிப்புகளை விட அதிகமாக இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு சுற்றறிக்கை அறிவுறுத்துகிறது. மேலும், ஒரு நிறுவனத்தில் ஊதியம் ரூ. 15,000க்கு மேல் இருந்தால், அப்போது 24 சதவீத வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) பங்களிப்பு பிஎஃப் கணக்கிலேயே இருக்கும்.

"மேலே உள்ள அறிவுறுத்தல்கள், பல கணக்குகளைக் (Multiiple EPS Account) கொண்ட உறுப்பினர்லள் உள்ள அனைத்து நிறுவனங்களின் கவனத்திற்கும் சம்பந்தப்பட்ட பிராந்திய அலுவலர்களால் தெரிவிக்கப்படும். இதன் மூலம் முதல் நிகழ்விலேயே நிறுவனம் சரியான மின்னணு சலான் மற்றும் ரிட்டன் (ECR)களை சமர்ப்பிக்கும்" என்று சுற்றறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இபிஎஸ் என்றால் என்ன? (What is EPS)

EPS என்பது 1995 இல் EPFO ஆல் தொடங்கப்பட்ட ஒரு குறைந்தபட்ச ஓய்வூதியத் திட்டமாகும். இதன் கீழ் ஊழியர்கள் ஓய்வூதியப் பலனுக்குத் தகுதியுடையவர்களாகிறார்கள். செப்டம்பர் 2014 முதல், EPF திட்டத்தில் சேரும் நபர்கள், அவர்களின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.15,000க்கு மிகாமல் இருந்தால், EPS-ல் சேர தகுதியுடையவர்கள் என விதிகள் கூறுகின்றன. மேலும், இபிஎஸ் மாதாந்திர ஓய்வூதியத்திற்குத் (Monthly Pension) தகுதிபெற, ஒரு ஊழியர் (Employee) குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பங்களிப்புச் சேவையைப் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: 50% டிஏ உறுதி, பிற அலவன்சுகளிலும் ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News