பெட்ரோல், டீசல் கமிஷனை உயர்த்தக்கோரி, இன்று நாடு முழுவதும் 70 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகளில் எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது. இதன்படி இன்றும் நாளையும் எண்ணெய் விற்பனை நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல், டீசல் வாங்க மாட்டோம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல், டீசல் சில்லரை விலை உயர்வுக்கு பிறகு பெட்ரோலிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டி வரும் நிலையில், டீலர்களின் கமிஷன் தொகை உயர்த்தப்படவில்லை என பம்ப் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். செவ்வாய்கிழமை, 24 மாநிலங்களில் உள்ள 70 ஆயிரம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மே 31 அன்று இந்த நிறுவனங்களிடமிருந்து எண்ணெய் வாங்க போவதில்லை என முடிவு செய்துள்ளனர்.


மேலும் படிக்க | IOCL M15 Petrol: இந்தியன் ஆயிலின் மெத்தனால் கலந்த மலிவு விலை பெட்ரோல்


இன்று நாடு முழுவதும் உள்ள 24 மாநிலங்களின் பெட்ரோல் பங்க்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், பீகார், அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, சிக்கிம் மற்றும் வட வங்கம் ஆகியவை அடங்கும். இது தவிர உ.பி., மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பல டீலர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர்.


எனினும் இந்த போராட்டம் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. இரண்டு நாட்களுக்கு பெட்ரோல் பம்புகளில் இருப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம்.


இந்த போராட்டத்தின் தாக்கம் எண்ணெய் நிறுவனங்களின் விற்பனை மற்றும் கொள்முதலில் மட்டுமே இருக்கும்.


எண்ணெய் நிறுவனங்களுக்கும் டீலர்களுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை பெட்ரோல் பம்ப் டீலர் அமைப்புகள் குற்றம் சாட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் கீழ், டீலர் நிறுவனங்களின் மார்ஜின் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் மாற்றப்பட வேண்டும். ஆனால்,  2017 முதல் இதில் எந்த மாற்றமும் இல்லை என கூறப்படுகிறது. இதனிடையே பெட்ரோல், டீசல் சில்லறை விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதற்கு பெட்ரோல் பங்க் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | பெட்ரோல் டீசல் விலை குறையுமா; நிதி அமைச்சர் கூறுவது என்ன..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR