கொரோனா காரணமாக, 1.25 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையை இழந்து விட்டனர். இவர்கள் அனைவரும் பயன்பெரும் வகையில், 1 கோடியே 25 லட்சம் வேலை வாய்ப்பை அளிக்கும் UP வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் அறிவித்தார். இந்த திட்டத்தினால் பலன் பெறுவார்கள். 35 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலமான உத்திர பிரதேசத்திற்கு திரும்பியுள்ளனர். இதில், 30 லட்சம் தொழிலாளர்களின் தொழில் திறன் குறித்த தகவல்கள் அரசால் திரட்டப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லக்னோ (Lucknow): பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) உத்திர பிரதேச மாநிலத்தில் வேலை வாய்ப்பை பெருக்கும் வகையில் உள்ளூர் தொழில் முனைவோர் மற்றும் தொழில் துறையுடனான கூட்டாளித்துவதை மேம்படுத்தும், சுயசார்பு திட்டமான, ஆத்ம நிர்பர் UP வேலை வாய்ப்பு திட்டத்தை அறிவித்துள்ளார்.  


ALSO READ | எல்லை பகுதியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சுமார் 170% ஊதிய உயர்வு... ஏன் தெரியுமா?


இதற்கான நிகழ்ச்சியில் பேசிய உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் (Yogi Adityanath), இந்த முயற்சிக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். கொரோனா காரணமாக,  வேலை இழந்த 1.25 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதனால் பயன் அடைவார்கள். மாநிலத்திற்கு திரும்பி வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உள்ள தொழில் திறன்கள் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டு, அதன் மூலம் சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.


மெய்நிகர் முறையில் இந்த திட்டத்தை தொடக்கி வைத்த பிரதமர் மோடி (PM Modi), உத்திர பிரதேசத்தின் ஆறு மாவட்டங்களில் உள்ள கிராமத்தினரிடம் உரையாடினார். கிராம சேவை மையங்கள் மற்றும் வேளாண் மையங்கள் மூலம் இந்த உரையாடலில் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்றனர்.


ALSO READ | ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்; எச்சரிக்கும் உளவுதுறை...


இந்த சுய சார்பு திட்டம், பல்வேறு துறைகளை ஊக்குவிக்கும். வேலை வாய்பை பெருக்குவதற்காக, பின் தங்கிய பகுதிகளில் கட்டமைப்பை உருவாக்க ஊக்குவிக்கிறது. இது தவிர ஜூன் 20ம் தேதி அன்று, ஏழைகளுக்கான வேலை வாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


கொரோனா பெருந்தொற்று, மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளதோடு, பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. இதை அடுத்து, மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிடவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மொழியாக்கம்: வித்யா கோபாலகிருஷ்ணன்