மத்திய அரசின் ‘ஸ்வமித்வா’ (SVAMITVA) திட்டத்தின் கீழ், 6 மாநிலங்களில் உள்ள 763 கிராமங்களைச் சேர்ந்த 1.3 லட்சம் பேருக்கு, ஆதார் போன்ற சொத்து அட்டைகளை, இன்று பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்க உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஏப்ரல் மாதம் பஞ்சாயத்துராஜ் தினத்தன்று, மத்திய அரசு அறிவித்த திட்டம் SVAMITVA திட்டம் ஆகும். 


நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள வீடுகள்,  நிலங்கள், தொடர்பான அதிகாரப்பூர்வ விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை. இதனால், கிராமப்புறங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதிலும் தாமதம் ஏற்படுகிறது. 


இதற்கு தீர்வு காண ‘ஸ்வமித்வா’ என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்தார். கிராமங்களில் சொந்தமாக நிலம், வீடு வைத்திருப் போருக்கு சொத்து விவர அட்டை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இயற்கை சீற்றங்களின் போது நிவாரணம் வழங்கவும், சட்ட சிக்கல்களை தீர்க்கவும் இது பெரிது உதவும். நில அபகரிப்பை தடுப்பதிலும் இது பெரிதும் உதவும்.


இதன் மூலம், சொத்து தகராறுகள், வழக்குகளாக பல வருடங்கள் இழுத்தடிக்கப்படும் நிலை தவிர்க்கப்பட்டு உடனடி தீர்வுகள் ஏற்படும். இதன் மூலம் நில உரிமையாளர்கள் எளிதாக கடன் வாங்கலாம்.


சொத்துக்கள் ட்ரோன் தொழில்நுட்பம் உதவியுடன் அளக்கப்பட்டு, 132,000 நில உரிமையாளர்கள் ஆதார் போன்ற சொத்து அட்டைகளை பெறுவார்கள். 


இதற்கான மெய்நிகர் நிகழ்வின் போது பிரதமர் மோடி சில பயனாளிகளுடன் உரையாடுவார். மத்திய பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும்  இதில் கலந்து கொள்வார்கள். 


உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 346, ஹரியானாவிலிருந்து 221, மகாராஷ்டிராவைச் சேர்ந்த 100, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 50, உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 50, கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு கிராமங்கள் உட்பட ஆறு மாநிலங்களில் 763 கிராமங்களைச் சேர்ந்த  1 லட்சத்து 32 ஆயி ரம் மக்களுக்கு சொத்து விவர அட்டைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்குகிறார்.


இத்திட்டம் படிப்படியாக நாட்டில் உள்ள  அனைத்து கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. வங்கிகளில் இருந்து கடன் பெறுவதற்கு இந்த அட்டைகளை சமர்ப்பித்தாலே போதுமானது என மத்திய அரசு கூறியுள்ளது.


ALSO READ | 2050 க்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்: ஆய்வு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe