மும்பை பயங்கரவாத தாக்குதல் காயங்களை இந்தியா ஒருபோதும் மறக்காது: பிரதமர் மோடி
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஏற்பட்ட காயங்களை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது இந்தியா ஏற்படுத்திய காயங்களை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) வியாழக்கிழமை தெரிவித்தார். பிரதமர் மோடி, அகில இந்திய தலைமை அதிகாரிகள் மாநாட்டில் உரையாற்றியபோது, இன்று இந்தியா புதிய கொள்கைகளுடன் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறது என்று கூறினார்.
“2008 ல் இந்த நாளில், பாகிஸ்தானைச் (Pakistan) சேர்ந்த பயங்கரவாதிகள் மும்பையைத் தாக்கினர். இந்தியர்கள், வெளிநாட்டு குடிமக்கள், போலீசார் உட்பட பலர் இறந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அந்த காயங்களை இந்தியா மறக்க முடியாது. இன்று இந்தியா புதிய கொள்கைகளுடன் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் எங்கள் பாதுகாவல் படையினரை நான் தலைவணங்குகிறேன், ”என்று பிரதமர் மோடி கூறினார்.
2008 நவம்பர் மாதம், 26ம் தேதி, மும்பை முழுவதும் நான்கு நாட்கள் நீடித்த துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்புத் தாக்குதல்களை பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த (LeT) பத்து பயங்கரவாதிகள் நடத்தியதில் ஆறு அமெரிக்கர்கள் மற்றும் ஒன்பது பயங்கரவாதிகள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ALSO READ| மும்பையை முடக்கிப்போட்ட அந்த 3 நாட்கள்: 26/11 நினைவு நாள்
தாஜ்மஹால் ஹோட்டல், ஓபராய் ஹோட்டல், லியோபோல்ட் கஃபே, நாரிமன் (சபாத்) ஹவுஸ் மற்றும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையம் ஆகியவை குறிவைக்கப்பட்ட இடங்கள்.
குஜராத்தின் (Gujarat) கெவாடியாவில் அரசியலமைப்பு தின கொண்டாட்டங்களைக் குறிக்கும் சட்டமன்ற அமைப்புகளின் தலைமை அதிகாரிகளின் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய அரசியலமைப்பில் கடமைகளின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டுள்ளது என்றார். “காந்தி ஜி கடமையில் ஈடுபாடு கொண்டு இருந்தார். நமது கடமைகளை ஒழுங்காக செய்தால், உரிமைகள் தானாகவே பாதுகாக்கப்படும் என்பதை அவர் உணர்ந்திருந்தார், ”பிரதமர் மோடி மேலும் கூறினார்.
ALSO READ | Corona Vaccine-க்கான முழு செலவையும் மோடி அரசாங்கமே ஏற்கவுள்ளதா
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR