புதுடெல்லி: நாட்டின் கொரோனா இரண்டாவது அலை மக்களை பாடாய் படுத்தி வரும் நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளிணைந்து போராடி வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் (Mamata Banerjee) பங்கேற்க உள்ளதாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. மாவட்டங்களில் COVID-19 நிர்வாக பணிகளை பிரதமர் மதிப்பீடு செய்வதோடு, தடுப்பூசி போடு நடவடிக்கைகளை  மேம்படுத்துவதற்கான வழிகல் குறித்து ஆலோசனை செய்கிறார்.


மேற்கு வங்கத்தைத் தவிர, உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஒடிசா, கேரளா, ஹரியானா உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களின் தலைமைச் செயலாளர், சுகாதார செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் இந்த கொரோனா நடவடிக்கை தொடர்பான மறுஆய்வு கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை, பிரதமர் கர்நாடகா, பீகார், அஸ்ஸாம், சண்டிகர், தமிழ்நாடு, உத்தரகண்ட், மத்திய பிரதேசம், கோவா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் தில்லி மாவட்ட அதிகாரிகளுடன் உரையாடினார்.


அக்கூட்டத்தில், ஆக்ஸிஜன் (Oxygen) சப்ளை, அனைவருக்கும் இலவச தடுப்பூசி மற்றும் தடுப்பூசி விரயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.


கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் சுமார் 2.76 லட்சம் (2,76,070) புதிய COVID-19 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இதனால்,  மொத்த தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 2.57 கோடியாக அதிகரித்துள்ளதாக, வியாழக்கிழமை மத்திய சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரே நாளில் 3,874 கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனால் இறப்பு எண்ணிக்கை 2,66,207 ஆக அதிகரித்துள்ளது.


ALSO READ | COVID-19: இந்தியாவின் இந்த கிராமத்தில் இன்று வரை கொரோனா இல்லை; இல்லவே இல்லை


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR