BJP Will Wins Fewer Than 300 Seats: லோக்சபா தேர்தலின் ஆறாவது கட்ட வாக்குப்பதிவுக்கு முன், அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், இஷ் பார் சார் ஷோ பார் (இந்தமுறை 400 இடங்கள் தாண்டும்) என்ற கோஷம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் 400 இடங்களைத் தாண்டுவோம் என்ற பாஜகவின் நம்பிக்கை வெற்றி பெறாது. அவர்களுக்கு அவ்வளவு சீட் கிடைக்காது எனக் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஜகவால் 370 இடங்களை வெல்ல முடியாது -பிரசாந்த் கிஷோர்


பிரசாந்த் கிஷோர் இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில், "2019 இல் பாஜக 303 இடங்களைப் பெற்றிருந்தது. இந்த முறையும் அவர்கள் இந்த எண்ணிக்கைக்கு அருகில் செல்வார்கள்" என்று கூறினார். பாஜக 370 இடங்களுக்கு மேல் பெறும் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். இது நடக்காது. அவர்கள் 270க்கும் குறைவான இடங்களை பெறப்போவதில்லை, ஆனால் நிச்சயமாக 370 இடங்களை அவர்களால் வெற்றி பெற முடியாது எனக் கூறியுள்ளார்.


வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பாஜகவுக்கு பின்னடைவு -பிரசாந்த் கிஷோர்


2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் உள்ள 303 இடங்களில் பாஜக 250 இடங்களை பெற்றது என்று பிரசாந்த் கிஷோர் கூறினார். இந்த முறை அங்கு பாஜக 50 தொகுதிகளில் தோல்வியடையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.


மேலும் படிக்க - பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் PLAN B திட்டமா? அமித் ஷா சொன்ன பதில்


கிழக்கு மற்றும் தெற்கில் பாஜகவின் செல்வாக்கு உயரும் -பிரசாந்த் கிஷோர்


இந்த முறை கிழக்கு மற்றும் தெற்கில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்கலாம் என்றார். மேற்கு வங்காளம், ஒடிசா, அசாம், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை சேர்த்து பாஜக 15 முதல் 20 இடங்கள் அதிகமாக கிடைக்கும் எனக் கூறினார். 


பிரதமர் மோடியின் தலைமையில் ஆட்சி அமையும் -பிரசாந்த் கிஷோர் நம்பிக்கை


பாஜக 370 இடங்கள் என்ற இலக்கை எட்டாவிட்டாலும், பிரதமர் மோடியின் தலைமையில் ஆட்சி அமைக்க முடியும் என்று தான் நம்புவதாகவும் பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டுள்ளார்.


428 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்தது


லோக்சபா தேர்தலுக்கான ஐந்து கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து உள்ளது. நாட்டில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 428 தொகுதிகளுக்கு இதுவரை வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போது 114 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 


மேலும் படிக்க - 'எங்களின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டோம்' - இந்தியா கூட்டணி அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ