அரவிந்த் சாவந்தின் ராஜினாமா ஏற்கப்பட்டதையடுத்து, அவரது துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை: சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.அவரது கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது.


மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி, ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றும், சிவசேனாவின் அதிரடி நிபந்தனைகளால் ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டது.  முதல்வர் பதவியை விட்டுத் தருவதற்கு பாஜக சம்மதிக்காததால் அக்கட்சியுடனான கூட்டணியை சிவசேனா முறித்துக்கொண்டது. 


மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இடம்பெற்றிருந்த சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த், தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் அரவிந்த் சாவந்தின் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார். மோடியின் பரிந்துரையின் பேரில் ராஜினாமா ஏற்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. 


இதையடுத்து அரவிந்த் சாவந்த் வசம் இருந்த கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை, மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.