உறுதியானதா NCP-சிவசேனா கூட்டணி; பதவி விலகினார் அரவிந்த் சாவந்த்!

மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி குறித்து யூகங்களை மெய்யாக்கும் விதமாக சிவசேனா MP அரவிந்த் சாவந்த், NDA அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளார்.

Last Updated : Nov 11, 2019, 09:47 AM IST
  • 15 நாட்கள் கடந்துவிட்ட போதிலும், எந்தவொரு கட்சியும் அல்லது கூட்டணியும் அரசாங்கத்தை அமைக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • தாக்கரே மற்றும் ஷரத் பவார் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது சேனா மற்றும் NCP-க்கு இடையே ஒரு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
  • சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி குறித்து யூகங்களை மெய்யாக்கும் விதமாக சிவசேனா MP அரவிந்த் சாவந்த், NDA அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளார்.
உறுதியானதா NCP-சிவசேனா கூட்டணி; பதவி விலகினார் அரவிந்த் சாவந்த்! title=

மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி குறித்து யூகங்களை மெய்யாக்கும் விதமாக சிவசேனா MP அரவிந்த் சாவந்த், NDA அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளார்.

பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) ஏற்பட்ட அடியாக, மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவன அமைச்சரும், சிவசேனா MP-யுமான அரவிந்த் சாவந்த் திங்கள்கிழமை அதிகாலை தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சிவசேனா மகாராஷ்டிராவில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஒரு தனி வழியை நோக்கிச் செல்வதால் இது ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே திங்களன்று தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் அரசாங்கத்தை அமைப்பதற்கான கூற்றைப் பெற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதில் தனது கட்சியின் ஆதரவைப் பெற சிவசேனா பாஜக-வுடனான அனைத்து உறவுகளையும் கடுமையாக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) மூத்த தலைவர் நவாப் மாலிக் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூற்றை ஏற்கும் விதமாக தற்போது சிவசேனா MP அரவிந்த் சாவந்த், NDA அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளார்.

ஜீ நியூஸ் வட்டாரங்களின்படி, தாக்கரே மற்றும் ஷரத் பவார் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது சேனா மற்றும் NCP-க்கு இடையே ஒரு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி, அரசாங்கத்தை அமைப்பதற்கான தனது விருப்பத்தை சுட்டிக்காட்ட மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை அழைத்த ஒரு நாள் கழித்து, உத்தவ் தாக்கரே இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார் என கூறப்படுகிறது. மேலும், சிவசேனா-NCP அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா சட்டசபைக்கான தேர்தல்கள் அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெற்றன, முடிவுகள் அக்டோபர் 24-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இருப்பினும், 15 நாட்கள் கடந்துவிட்ட போதிலும், எந்தவொரு கட்சியும் அல்லது கூட்டணியும் அரசாங்கத்தை அமைக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News