தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் பல்வேறு கட்சிகளுக்கு பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் வியூக நிபுணராக பணிபுரிந்துள்ளார். இதனிடையே காங்கிரஸில் அவர் இணையவுள்ளதாக கடந்த சில நாட்களாக பேச்சு அடிபட்டுவந்தது. ஆனால் அது தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில் பீகார் மாநிலத்தை மையமாகக் கொண்டு புதிய கட்சி ஒன்றை அவர் தொடங்கவுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றும் இதனை சூசகமாகத் தெரிவித்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறிவருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ரூ. 1,710 கோடி! ஒரே இடியில் காலி!


கடந்த மாதம் காங்கிரஸ் தங்களது கட்சியில் சேர விடுத்த அழைப்பை நிராகரிப்பதாக தெரிவித்து இருந்தார்.  2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு தேர்தல் ஆலோசகராக செயல்பட்டு, திமுகவிற்கு வெற்றியையும் பெற்று கொடுத்தார்.  இதற்காக 350 கோடி பிரசாந்த் கிஷோருக்கு தரப்பட்டதாக சொல்லப்பட்டது.  2014 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆலோசகராக செயல்பட்டார்.  பின்பு, பாஜக கட்சியுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அவர்களிடம் இருந்து வெளியேறினார்.  


 



பின்பு, பஞ்சாப் முதல்வருக்கு தேர்தலில் ஆலோசனை வழங்கி அவர்களையும் வெற்றி பெற செய்தார்.  இந்தியாவில் தவிர்க்கமுடியாத ஒரு சக்தியாக இருந்து வரும் பிரசாந்த் கிஷோர் தற்போது எம்.பி ஆகவும் உள்ளார். இந்நிலையில் தற்போது இவர் அரசியல் கட்சி தொடங்க இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இவரை தங்களது கட்சியில் இணைத்து கொள்ள திட்டமிட்ட நிலையில் பிரசாந்த் கிஷோர் இந்த முடிவை எடுத்து உள்ளார்.


மேலும் படிக்க | இந்தியை விரும்பாதவர்கள் அயல் நாட்டுக்கார்கள் - உ.பி அமைச்சர் திமிர் பேச்சு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR