பிரதமர் மோடி 1லட்சம் கோடி மதிப்பிலான வேளாண் கட்டமைப்பு நிதியை தொடக்கி வைத்தார்
விவசாயிகளுக்கு மிக பெரிய ஊக்க நடவடிக்கையாக, 1லட்சம் கோடி மதிப்பிலான வேளாண் கட்டமைப்பு நிதியை தொடக்கி வைத்தார் பிரதமர்.
விவசாயிகளுக்கு மிக பெரிய ஊக்க நடவடிக்கையாக, 1லட்சம் கோடி மதிப்பிலான வேளாண் கட்டமைப்பு நிதியை தொடக்கி வைத்தார் பிரதமர்.
விவசாயிகளுக்கான ஊக்க நிதியின் கீழ் நாட்டில் உள்ள சுமார் 8.5 கோடி விவசாயிகளுக்கு ₹.17,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 நெருக்கடி சமயத்தில், விவசாயிகளுக்கும் உதவிடச் இந்த நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு நொடியில் ஒரே சமயத்தில், 8.5 கோடி விவசாயிகளுக்கு, அவர்களது வங்கி கணக்குகளில் சுமார் 17,000 கோடி அனுப்பப்பட்டுவிட்டது என பிரதமர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ALSO READ | குப்பைகளை தங்கமாக மாற்றும் நாடாக இந்தியா மாற வேண்டும்: PM Modi
நடுவில் எந்த தரகரும் இல்லை எந்த கமிஷனும் இல்லை நேரிடையாக பணம் விவாசாயிகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டது.
கடந்த 1 1/2 ஆண்டுகளில் இந்த திட்டம் மூலமாக, 75 ஆயிரம் கோடி பணம் நேரிடையாக அனுப்பபட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
விவசாயிகள் தற்போது மண்டியை மட்டும் சார்ந்திருக்க வேண்டிய நிலை இல்லை. அவர்களுக்கு இப்போது பல வகையான வாய்ப்புகள் உள்ளன எனவும் குறிப்பிட்டார்.
தனது விளைச்சலை என்ன செய்ய வேண்டும் எப்போது விற்க வேண்டும், யாருக்கு விற்க வேண்டும் என்பதை விவசாயிகள் முடிவு செய்யும் நிலை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நவீன கட்டமைப்பின் மூலம், விசாயிகளுக்கான வசதிகளும் வாய்ப்புகளும் பெருகியுள்ளன என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
ALSO READ | களையிழந்தது கிருஷ்ண ஜென்மாஷ்டமி.. வேலை இழந்த மதுராபுரி முஸ்லிம் கலைஞர்கள்..!!!
விவசாயிகளுக்கு இந்த கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகளுக்கு கடன் வழங்க 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 2020-2012 ஆம் ஆண்டுகளில், கடன் வழங்க 10,000 கோடி ஒதுக்கபப்ட்டுள்ளதாகவும், மீதி மூன்று ஆண்டுகளுக்கு 30,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
நமது நாட்டில், சிறிய விவசாயிகளுக்கு தான் அதிக பிரச்சனைகள் உள்ளன என்றும், அவர்களுக்கு உதவி செய்யவும், அவர்களுக்கு பலன் தரும் வகையிலான சீர்திருத்தங்களை ஏற்படுத்தவும், அரசு திட்டங்களை கொண்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.