குப்பைகளை தங்கமாக மாற்றும் நாடாக இந்தியா மாற வேண்டும்: PM Modi

வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய இந்த நாளில், நாம் இந்தியாவில் இருந்து அசுத்தத்தை விரட்ட வேண்டும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார். 

Last Updated : Aug 8, 2020, 08:29 PM IST
  • பிரதமர் தொடக்கி வைத்துள்ள தூய்மை இயக்கம் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வரை தொடரும்.
  • 2014 ஆண்டிற்கு முன்னால் கொரோனா தொற்று பரவும் நிலை ஏற்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என கேள்வி எழுப்பினார் பிரதமர் மோடி.
  • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கழிப்பறைகளை கட்டிக் கொடுத்ததால், பெண்களுக்கு பாதுகாப்பும் தன்னம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.
குப்பைகளை தங்கமாக மாற்றும் நாடாக இந்தியா மாற வேண்டும்: PM Modi title=

இன்று பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய ஆண்டு தினத்தில், அசுத்தமே வெளியேறு என்னும் இயக்கத்தை தொடக்கி வைத்தார். 

இந்த இயக்கம் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வரை தொடரும்.

 இப்போது திறந்த வெளியில் மலம் கழிக்காத நாடு,  என்ற நிலையில் இருந்து, குப்பைகளை தங்கமாக மாற்றும் நாடாக மாற வேண்டும் என மோடி குறிப்பிட்டார்.

ALSO READ | ஆர்டிக் வெப்பம்: கனடாவில் 4000 ஆண்டு பழமையான கடைசி பனிக்கட்டி தொடரும் உடைந்தது!!!

இந்தியாவில் 60 சதவிகிதம் பேர், திறந்த வெளியில் மலம் கழித்து கொண்டிருந்த கால கட்டத்தில், 2014 ஆண்டிற்கு முன்னால் கொரோனா  தொற்று பரவும் நிலை ஏற்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என கேள்வி எழுப்பினார் பிரதமர் மோடி. 

தேசிய தூய்மை மையத்தை திறந்து வைத்த பிரதமர், பள்ளிக் குழந்தைகளிடையே உரையாற்றினார். 

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கழிப்பறைகளை கட்டிக் கொடுத்ததால், பெண்களுக்கு பாதுகாப்பும் தன்னம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. ஏழை குழந்தைகள் நோய் தொற்றிலிருந்து காக்கப்பட்டுள்ளனர் என்றார் பிரதமர் மோடி. 

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஆண்டு தினமான இன்று, அசுத்தமே வெளியேறு என்னும் ஒரு வார கால இயக்கத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். 

ALSO READ | Back To Home: கோழிக்கோடு விமான விபத்தில் இறந்தவரின் கடைசி முக நூல் பதிவு

மக்கள் சுத்தத்தை பராமரிக்க, தொழில்நுட்பமும் உதவியுள்ளது என குழந்தைகளுடன் உரையாடிய மோடி குறிப்பிட்டார்.

வடகிழக்கு இந்தியா தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக் கடைபிடித்து வருகிறது என பாராட்டிய பிரதமர், தூய்மை இந்தியா திட்டத்தில் சிறுவர்கள்  முழு ஈடுபாட்டுடன் பங்கேற்க வேண்டும் என்றார்.

Trending News