ரபேல் வழக்கில் ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலடி தந்த நிர்மலா சீதாராமன்
ரஃபேல் ஒப்பந்தம் ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் கோரிக்கையான பத்திரிகையில் வெளியான ரபேல் ரகசிய ஆவணங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையை நிராகரித்தது. மேலும் சீராய்வு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். அதுக்குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். அதற்க்கான தேதியை விரைவில் அறிவிக்கப்படும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக மத்திய அரசை சாடினார். இதற்கு பதில் அளித்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ரஃபேல் ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் புது தில்லியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது விளக்கம் அளித்தார்.
அவர் கூறியது, ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கின் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இனிமேல் தான் நடைபெற உள்ளது. ஆனால் ரபேல் குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்துகளை சரியாக படிக்காமல் ராகுல்காந்தி திரித்து கூறுகிறார். காவலாளி திருடன் எனக் கூறுகிறார். ரபேல் குறித்து வெளியான ஒரு சில ஆவணங்கள் சட்டவிரோதமான முறையில் வெளியாகியுள்ளது. அதனால் தான் நீதிமன்றத்தில் முறையிட்டோம். ஆனால் அனைத்து வித ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
ரபேல் குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்துகளை ராகுல் காந்தி திரித்து கூறுகிறார். இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.