புதுடில்லி: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உயர் ரத்த அழுத்தம் காரணமாக, 2020 டிசம்பர் 25 அன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவமனை அவரது உடல் நிலை குறித்த புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவரது பிபி, அதாவது ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளது. எனினும், ​​ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


ரஜினிகாந்தின் (Rajinikanth) சமீபத்திய உடல் நல அறிக்கையை பிரபல விமர்சகர் ரமேஷ் பாலா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.



உடல்நலம்  குறித்த மருத்துவ அறிக்கையில், உயர் ரத்த அழுத்தத்திற்கான மருத்துகள் அவருக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் உடலநிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அவரது உயர் இரத்த அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு அவருக்கு முழு ஓய்வு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் பார்வையாளர்கள் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.


மருத்துவ அறிக்கைகள் மற்றும் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், அவரை எப்பொழுது டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறித்து மாலைக்குள் முடிவு செய்யப்படும் என அப்போலோ மருத்துவமனை (Apollo Hospital) கூறியுள்ளது.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்திற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, ரவினிகாந்த் நடித்த ‘அண்ணாத்தே’  (Annaatthe) திரைப்படத்தின் படப்பிடிப்பில், படப்பிடிப்பு குழுவில் இருந்த நான்கு பேருக்கு டிசம்பர் 23 புதன்கிழமை நிறுத்தப்பட்டது, நான்கு குழு பேருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து படபிடிப்பு நிறுத்தப்பட்டது. இருப்பினும், ரஜினிகாந்த் மற்றும் பிற நடிகர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் நடத்திய பரிசோதனையில், அவர்களுக்கு தொற்றூ ஏதும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.  


'அண்ணாத்தே’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம்சிட்டியில் நடந்து கொண்டிருந்தது.ரஜினிகாந்த் டிசம்பர் 13 ஆம் தேதி படப்பிடிப்பிறக்காக ஹைதராபாத் சென்றார்.


நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு சுந்தர் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். 


ALSO READ | ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது: விரைவில் குணமடைய பிரபலங்கள் வாழ்த்து


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR