ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது: விரைவில் குணமடைய பிரபலங்கள் வாழ்த்து

ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் ஓய்வில் இருப்பதாகவும் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 26, 2020, 11:56 AM IST
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய கமல்ஹாசன் வாழ்த்து.
  • ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்.
  • அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது: விரைவில் குணமடைய பிரபலங்கள் வாழ்த்து title=

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியானதிலிருந்து அவர் விரைவில் குணமடைய அவரது ரசிகர்களும் பல பிரபலங்களும் அவருக்கு சமூக ஊடகங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் (Kamal Haasan) தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினிகாந்த் விரைவாக குணமடைய அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நேற்று, ரஜினிகாந்தின் உடல்நிலை நிலையாக இருப்பதாகவும் அவர் ஓய்வில் இருப்பதாகவும் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. 70 வயதான ரஜினிகாந்த், மருத்துவமனையில் தங்கி மேலதிக பரிசோதனைகளை சனிக்கிழமை மேற்கொள்வார் என்றும் கூறப்பட்டது.

"ரஜினிகாந்த் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார். மேலும் அவரது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மருந்துகள் கவனமாக அளிக்கப்பட்டு வருகின்றன” என்றும் கூறப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் (Rajinikanth) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது குறித்து கேள்விப்பட்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் (Tamilisai Soundararajan), அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

ALSO READ: நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதி

முன்னதாக, நேற்று ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட அதிக மாறுபாடுகள் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் (Apollo Hospital) அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ நிர்வாகம், கொரோனாவிற்கான எந்த அறிகுறியும் ரஜினிகாந்த்திற்கு இல்லை என்றும், ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.

ரஜினிகாந்த் ஹைதராபாதில் கடந்த 10 நாட்களாக சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த (Annaatthe) படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். படத்தின் 4 குழு உறுப்பினர்களுக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

ALSO READ: ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்: காரணம் இதுதான்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News