புதுடில்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி, என்.சி.பி மற்றும் காங்கிரஸுடன் சேர்ந்து அரசாங்கத்தை அமைப்பதற்காக நடந்து வரும் குழப்பங்களுக்கு மத்தியில், சிவசேனா கட்சி செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரவுத், கடந்த 10-15 நாட்களாக மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்காக இருந்த இடையூறுகள் நீக்கப்பட்டு உள்ளன. அனைத்து தடைகளையும் தாண்டிவிட்டது. நாளை நண்பகல் 12 மணிக்கு நீங்கள் அறிந்து கொள்வீர்கள். முழு படமும் நாளை பிற்பகலில் ரீலீஸ் ஆகிவிடும். அரசு அமைப்பதற்கான பணிகள் 5-6 நாட்களில் நிறைவடைந்து. டிசம்பர் மாதத்திற்கு முன்னர் பிரபலமான மற்றும் நிரந்தர அரசு மகாராஷ்டிராவில் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிராவில் நடந்து வரும் அரசியல் முட்டுக்கட்டைகளுக்கு மத்தியில் மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக என்.சி.பி தலைவர் சரத் பவார் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். மகாராஷ்டிராவின் அரசியல் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதற்கு பதிலளித்த சஞ்சய் ரவுத், "ஒரு தலைவர் பிரதமரை சந்தித்தால், பெரும் விவாதம் ஆக்கப்படுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய அவர், பிரதமர் என்பவர் நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவானவர். மகாராஷ்டிராவில் விவசாயிகள் பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர். சரத் பவாரும், உத்தவ் தாக்கரே எப்போதும் விவசாயிகளைப் பற்றி பேசுகிறார்கள். விவசாயிகளின் பிரச்சனையை தீர்ப்பது குறித்து ஆலோசனை செய்ய தான் பிரதமரை NCP தலைவர் சந்திக்க உள்ளார் எனக் கூறியுள்ளார்.


 



தனது உரையின் விரிவாக்கத்தில், சஞ்சய் ரவுத் மேலும் கூறுகையில், "விவசாயிகள் பிரச்சினை சம்பந்தமாக உத்தவ் தாக்கரே டெல்லிக்கு வந்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரை சந்தித்தால், அது குற்றமா? எதற்கு விவாதம்? பாராளுமன்றத்திற்குள் அல்லது வெளியே எவரும் பிரதமரை சந்திக்க முடியும். சரத் பவார் என்பவர் விவசாயத் துறையில் நன்கு அறியப்பட்ட பெயர். அவர் மாநிலத்தின் நிலையை நன்கு புரிந்துகொள்கிறார்.மகாராஷ்டிரா மாநில விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பிரதமருக்கு தெரியப்படுத்தவும் சரத் பவாரை நாங்கள் கேட்டுள்ளோம் என்று அவர் கூறினார். 


மகாராஷ்டிராவைச் சேர்ந்த அனைத்து கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்து விவசாயிகளின் நிலை குறித்து அவருக்கு விளக்கம் அளிப்பார்கள். விவசாயிகளுக்கு மையத்திலிருந்து அதிகபட்ச உதவி கிடைப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம் எனவும் கூறினார்.


சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி என்சிபி கட்சியை பாராட்டினார் என்பதை எங்களுக்குத் நினைவுப் படுத்துகிறோம். பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் சரத் பவாரின் கட்சியான என்.சி.பியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருந்தார். அதாவது, கடந்த 18 ஆம் தேதி மாநிலங்களவையின் 250வது அமர்வு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi) இரண்டு முறை என்.சி.பி. (தேசியவாத காங்கிரஸ் கட்சி) கட்சியை புகழ்ந்து பேசியுள்ளார். 


அதாவது பி.ஜே.டி (Biju Janata Dal) மற்றும் என்.சி.பி ஆகிய கட்சிகள் சபையில் ஒழுக்கத்தை பேணுகின்றன என்று அவர் கூறினார். இரு கட்சிகளும் மற்ற கட்சிகளை, தரம் தாழ்த்தி பேசுவதோ அல்லது சபையின் முன்னுக்கு வந்து கூச்சல் போடுவதோ போன்ற செயல்களை செய்யக்கூடாது என்று முடிவு செய்து, அதை செயல்படுத்தின. இதனால் இந்த இரு கட்சிகளின் அரசியல் வளர்ச்சி பயணத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு இரு கட்சிகளுக்கும் ஒரு உதாரணம் கொடுத்து, 'பாஜகவும் பிற கட்சிகளும் இவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். பிரதமர் மோடி NCP கட்சியை பாராட்டு இருப்பது, மகாராஷ்டிராவின் சமீபத்திய அரசியலுடன் தொடர்பு இருப்பதாக அரசியல் விமர்சனர்கள் தெரிவித்தனர்.