பாட்னா: மனித குலத்தை அவமானப்படுத்தும் ஒரு விஷயம் பீகார் மாநிலம் சமஸ்திபூரில் இருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இங்கு தனது தந்தை மீது ஒரு மகள் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளார். இதில் மகளை வன்புணர்வு செய்த தந்தை ஒரு ஆசிரியர் என்பது அதிர்ச்சியளிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவல்நிலையத்திற்கு தைரியமாக சென்று வழக்கு பதிவு செய்த அந்த பெண்ம் நீதி கேட்டு, தான் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவு செய்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.


இந்த விவகாரம், பீகாரின் சமஸ்திபூரின் ரோஸ்டா காவல் நிலையப் பகுதியில் நிகழ்ந்த சம்பவ்ம். பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்திற்கு வந்து தனது தந்தை மீது பலாத்கார வழக்கு பதிவு செய்தார்.


பலமுறை தான் மறுத்த பிறகும், தந்தை தனது பாலியல் சீண்டல்களை கைவிடாமல், தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக மகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


இதில் மேலும் கொடுமை என்னவென்றால், தந்தையின் அவமானகரமான செயலை தாயிடம் சொன்னால் அவரும் அதை கண்டுக் கொள்ளவில்லை என்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது.


மேலும் படிக்க | 7-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்! போக்சோ சட்டத்தில் தண்டனையை கடுமையாக்க வேண்டுமா?


எனவே, வேறு வழியில்லாமல், தந்தையின் பாலியல் வன்கொடுமையை வீடியோவாக எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று பாதிக்கப்பட்ட பெண் விளக்கமாக வழக்கு பதிவு செய்துள்ளார்.


தனது தாயும் தந்தைக்கு ஆதரவாக இருந்ததாக குற்றம் சாட்டிய பெண், தன்னை குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.


எனவே, பயத்தில் நீண்ட நாட்களாக பொறுத்திருந்தாலும், ஒரு கட்டத்தில் கொடுமைகளை பொறுக்க முடியாமல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண்.


இந்த வித்தியாசமான புகாரைப் பார்த்த காவல்துறையினர் அதிர்ந்து போனார்கள். உடனே போலீசார் துரித நடவடிக்கை எடுத்து தந்தையை கைது செய்தனர்.


கடந்த மாதம், சென்னை திருவொற்றியூர் பகுதியில் தந்தையே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் வெளியாகிவருவது குறிப்பிடத்தக்கது.


சென்னை வழக்கில், பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை POCSO சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.


மேலும் படிக்க | பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை POCSO சட்டத்தின் கீழ் கைது


இச்சம்பவம் குறித்து, தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மகளிர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.


குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அப்பா தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மகளிர் காவல் நிலைய போலீசார் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அனைவரையும் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். தற்போது, ​​பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் கவுன்சிலிங்குக்கு அனுப்பியுள்ளனர்.


இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை எழுப்பியுள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதைகளையே திகைப்புடன் பேசும் நிலையில், பெற்ற தகப்பனே, மகளை கட்டாயமாக வன்புணர்வு செய்து வந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.


அதோடு, தாயும் குடும்பத்தினரும் சேர்ந்து தந்தையை கண்டிக்காமல், பெண்ணை புறக்கணித்ததும் மிரட்டியதும் நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் என்ற கேள்விகளை எழுப்புகிறது.


மேலும் படிக்க | கோவையில் கெட்டுப்போன சிக்கன் கறிகள் - அம்பலமாகும் ஹோட்டல் ரகசியங்கள்.!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR