கன்னியாகுமரி மாவட்டம் பரப்பற்று பகுதியில் 7-ம் வகுப்பு சிறுமியை மிரட்டி கூலித்தொழிலாளி ஒருவர் 3 மாதங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் காரணமாக அந்த சிறுமி தற்போது 3 மாதங்கள் கர்ப்பமாக உள்ளார். சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், போக்சோ வழக்கில் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டுமா என்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் கூலித்தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 13-வயதில் பெண் குழந்தை உள்ளது. அந்த சிறுமியை மண்டைக்காட்டை அடுத்த பரப்பற்று பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி கடந்த சில நாட்களாக உடல் சோர்வுற்று காணப்படவே சிறுமியை பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும் படிக்க | பாலியல் வழக்கில் கைதான பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன்!
அங்கு அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமியை மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக குழந்தைகள் நல அதிகாரிகைளிடம் தெரிவித்துள்ளனர்.
சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணை நடத்தியதில் பாட்டி வீட்டு அருகே வசிக்கும் 28 வயதான குமார் என்ற கூலித்தொழிலாளி தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். அடிக்கடி தன்னிடம் குமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குழந்தைகள் நல அதிகாரிகள் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் குமார் மீது போக்சோ உள்ளிட்ட 5-பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுகளில் புதிய மாற்றங்கள்! அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக குழந்தைகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது. 18 வயதுக்கு கீழ் இருக்கும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. ஆனால் இந்த சட்டத்தின் கீழ் வேகமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போரூரில் 6 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த்க்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதுபோல பல போக்சோ வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டும் மேல்முறையீட்டால் தாமதமாகிறது. இதற்கு போக்சோ சட்டத்தில் வழங்கப்படும் தண்டனையை தாமதப்படுத்தாமல் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. போக்சோ வழக்கு தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என்று குழந்தைகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குழந்தைகள் தங்களுக்கு யாராவது பாலியல் வன்கொடுமையோ, தொந்தரவோ செய்தால் குழந்தைகள் உதவி எண்ணான 1098 என்ற நம்பருக்கு போன் செய்து தெரிவிக்கலாம். அவர்களின் ரகசியம் காக்கப்படுவதோடு உடனடி உதவியும் கிடைக்கும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR