புனே செய்திகள்: மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட்டில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சமோசாக்களில் ஆணுறைகள், குட்கா மற்றும் கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஐந்து நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரஹீம் ஷேக், அசார் ஷேக், மசார் ஷேக், ஃபிரோஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் ஆகியோர் சமோசாக்களில் ஆணுறை, குட்கா மற்றும் கற்களை வைத்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒரு தொழிலாளி கைது செய்யப்பட்டு உள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் எதிராக ஐபிசி 328 மற்றும் பிரிவுகள் 120(பி) மற்றும் 34 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமோசாவில் ஆணுறைகள் மற்றும் குட்கா


பி.டி.ஐ ஊடகம் வெளியிட்ட அறிக்கையின்படி, "சமோசாக்களில் ஆணுறைகள், குட்கா மற்றும் கற்கள் கலந்தவர்களில் ஒரு துணை ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்களும், முன்பே இதுபோன்ற கலப்படம் செய்த மற்றொரு நிறுவனத்தைச் சேர்ந்த மூவரும் அடங்குவர்.


காவல் நிலையத்தில் புகார்


ஆட்டோமொபைல் நிறுவனத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட தரப்பினர், கீர்த்திகுமார் சங்கராவ் தேசாய் (வயது 36) புனேவில் வசிப்பவர். இவர் ஏப்ரல் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிக்லி காவல் நிலையத்தில் சமோசாவில் கலப்படம் குறித்து புகார் அளித்தார். தேசாய் தனது புகாரில் நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட 5 பேர் மீது குற்றம் சாட்டினார்.


மேலும் படிக்க - 200 துண்டுகளாக மனைவியை வெட்டிக்கொன்ற ராட்சசன்... நாயை வாஷிங் மெஷினில் போட்டும் கொலை!


இந்த சம்பவம் குறித்து புனே போலீஸ் கூறுகையில், "புகார் அளித்த கீர்த்திகுமார் சங்கராவ் தேசாய் என்பவர் அவுந்தில் உள்ள கேடலிஸ்ட் சர்வீஸ் சொல்யூஷன்ஸ் பார்ட்னர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் உதவி பொது மேலாளராக பணியாற்றுகிறார். அவரது நிறுவனம் சிக்லியில் உள்ள ஒரு முக்கிய நிறுவனத்திற்கு உணவு சப்ளை செய்யும் ஒப்பந்தத்தைப் பெற்றிருந்தது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பிம்ப்ரி மோர்வாடியில் உள்ள எஸ்ஆர்எஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை சமோசா விநியோகத்தில் தேசாய் நிறுவனம் ஈடுபடுத்தியது.


எஸ்ஆர்எஸ் எண்டர்பிரைசஸ் vs தேசாய் நிறுவனம்


எஸ்ஆர்எஸ் எண்டர்பிரைசஸ் வழங்கிய சமோசாவின் 'முதலுதவி கட்டுகள்' இருப்பது கண்டறியப்பட்டபோது சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து தேசாய் நிறுவனம், எஸ்ஆர்எஸ் எண்டர்பிரைசஸ் உடனான ஒப்பந்தத்தை உடனடியாக முறித்துக் கொண்டது. இதனையடுத்து, புனேவில் உள்ள மற்றொரு நிறுவனமான மனோகர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் தங்களது உணவு விநியோகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒப்பந்தம் செய்தனர்.


எஸ்ஆர்எஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் கீழ்தரமான செயல்


இந்த சம்பவத்தால் கோபமடைந்த எஸ்ஆர்எஸ் எண்டர்பிரைசஸ் உரிமையாளர்களான ரஹீம் ஷேக், அசார் ஷேக் மற்றும் மசார் ஷேக் ஆகியோர் தேசாய் நிறுவனத்தை பழிவாங்க ஒரு மோசமான மிகவும் கீழ்தரமான செயலில் ஈடுபட திட்டம் போட்டு உள்ளனர். புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்தின் நற்பெயருக்கு பங்கம் விளைவிப்பதற்காக, மனோகர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் தினசரி கூலித் தொழிலாளர்களாக ஊடுருவ தங்கள் சக தொழிலாளர்களான ஃபெரோஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் ஆகியோரின் உதவியை நாடி உள்ளனர். 


 



 


தேசாய் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை நாசப்படுத்த சதித்திட்டம்


எஸ்ஆர்எஸ் எண்டர்பிரைசஸ் உரிமையாளர்களின் திட்டத்தின்படி செயல்பட்டு, மனோகர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடனான தேசாய் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை நாசப்படுத்தும் நோக்கில், ஃபெரோஸ் மற்றும் விக்கி ஆகியோர் சமோசாக்களில் ஆணுறைகள், கற்கள் மற்றும் குட்காவை நிரப்பி உள்ளனர். அது சனிக்கிழமையன்று, ஆட்டோமொபைல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. அப்பொழுது சில ஊழியர்கள் சமோசாக்களில் ஆணுறைகள், குட்கா மற்றும் கற்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.


தில்லுமுல்லு திட்டம் அம்பலமானது


மனோகர் எண்டர்பிரைசஸ் நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதில், இரண்டு தொழிலாளர்கள் சமோசாவில் ஆணுறை, குட்கா, கற்கள் உள்ளிட்டவைகளை கலப்பிடம் செய்தது தெரியவந்தது. அவர்கள் ஃபிரோஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் எனத் தெரியவந்தது. இந்த தில்லுமுல்லு திட்டம் தெரிந்தவுடன் தேசாய் நிறுவனம் உடனடியா காவல் துறையில் புகார் அளித்தது.


ஒருவர் கைது.. தொடரும் விசாரணை.. 


இந்த வழக்கில் மாண்டு என்கிற ஃபெரோஸ் ஷேக் கைது செய்யப்பட்டு உள்ளார். குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்கின்றனஎன காவல்து துறை அதிகாரி தெரிவித்தார்.


மேலும் படிக்க - பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்! திண்டுக்கலில் பாஜக பிரமுகர் தலைமறைவு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ