சீனா உட்பட பல ஆசிய நாடுகளில் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், நாட்டில் நான்காவது அலையாக கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன
மற்ற நாடுகளை போல் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய நேரங்களில் உடலில் ஏற்படும் புதிய மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும். கோவிட்-19 இன் இரண்டு ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி நாங்கள் கூற உள்ளோம், இது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களிடம் தொற்று ஏற்படும் போது காணலாம்.


மேலும் படிக்க | கொரோனாவை கட்டுப்படுத்த மக்களை உயிருடன் புதைக்கும் சீனா; அதிர்ச்சி தகவல்


நார்வேயில் நடந்த அதிர்ச்சிகரமான ஆய்வு
ஒரு நோர்வே ஆய்வின்படி, ஓமிக்ரான் பிரேக்அவுட்டின் போது ஒரு பார்ட்டி 177 விருந்தினர்களுக்கு நடைபெற்றது. இந்த விருந்தில் கலந்து கொண்ட முழு தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டபோது எட்டு முக்கிய அறிகுறிகள் இருந்தன. இதில் 66 பேருக்கு கோவிட்-19 இருப்பது உறுதியானதுடன்,  15 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. அத்துடன் இதில் 111 பேரில் 89 சதவீதம் பேர் எம்ஆர்என்ஏ தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்றுள்ளனர்.


முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களில் கோவிட் நோயின் 8 முக்கிய அறிகுறிகள் என்ன?
இருமல்
மூக்கு ஓழுகுதல்
சோர்வு
தொண்டை வலி
தலைவலி
தசை வலி
காய்ச்சல்
தும்மல்


முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களில் கோவிட் நோயின் இரண்டு ஆரம்ப அறிகுறிகள்
இதுகுறித்து சுகாதார நிபுணர்கள் கூறியதாவது, சோர்வு, தலைச்சுற்றல் அல்லது மயக்கம் என்பது இரண்டு வெவ்வேறு அறிகுறிகளாகும், அவை தொற்றும் போது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களில் தோன்றும். இதில் அந்த நபர் தசை வலி அல்லது பலவீனம் உணரலாம். தலைவலி மற்றும் மங்கலான பார்வை மற்றும் பசியின்மை காரணமாக உடல் வலி உணரப்படுகிறது. அதே நேரத்தில், தலைச்சுற்றல் அல்லது மயக்கம் என்பது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான மற்றொரு அறிகுறியாகும். ஒருவேளை அது ஓமிக்ரானாகக் கூட இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.


இந்தியாவில் 47 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலி
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,805 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,98,743 ஆக உயர்ந்தது. புதிதாக 22 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,024 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,168 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,54,416 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20,303 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 47 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாகவும், இது மத்திய அரசு அறிவித்துள்ளதை விட 10 மடங்கு அதிகம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.


மேலும் படிக்க | கட்டாயப்படுத்தி கொரோனா பரிசோதனை...அதிர்ச்சியூட்டும் காணொலி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR