மூஸ்வாலா உடல் தகனம் - சொந்த கிராமத்தில் குவிந்த ரசிகர்கள்
சுட்டுக்கொல்லப்பட்ட பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் இறுதிச்சடங்கில் ஏராளமான ரசிகர்களும், மக்களும் குவிந்தனர்.
பஞ்சாப் மாநிலத்தின் மான்சா மாவட்டத்தில் இருக்கு மூஸ்வாலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சித்து மூஸ்வாலா. இவர் சுப்தீப் சிங் சித்து என்றும் அழைக்கப்பட்டார்.
மின் பொறியியலில் பட்டம் பெற்ற அவர் கல்லூரி நாள்களில் இசையை கற்றுக்கொண்டு கனடாவுக்கு சென்றார். இவரது பாடல்கள் பெரும்பாலும் சர்ச்சையை ஏற்படுத்தியவை. கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான சித்துவின் பாடலான ஜட்டி ஜியோனே மோர் தி பண்டூக் வார்கி என்ற பாடல் 18ஆம் நூற்றாண்டைச் சேந்த சீக்கிய போர் வீரர் மாய் பாகோவை மோசமாக சித்தரித்ததாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து அவர் அதற்காக மன்னிப்பும் கேட்டார்.
இசை மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்ட அவர் கடந்த டிசம்பர் மாதம் காங்கிரஸில் இணைந்து அக்கட்சியின் சார்பில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மான்சா தொகுதியில் களமிறங்கினார். ஆனால், 63,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
இந்தச் சூழலில் அவர் கடந்த மாதம் பலி ஆடு என்ற பாடலை வெளியிட்டார். அதில் ஆம் ஆத்மி கட்சியையும், அதன் ஆதரவாளர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து கதர் (துரோகி) என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், மான்சா மாவட்டத்தில் கடந்த 29ஆம் தேதி சித்து காரில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். அதில் அவர் உயிரிழந்தார்.
இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர் இறப்பதற்கு முதல் நாள்தான் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்பை பஞ்சாப் அரசு விலக்கிக்கொண்டதால் அந்த அரசு மீது கடுமையான விமர்சனங்களும் வைக்கப்பட்டன.
இந்நிலையில், உடற்கூராய்வு முடிந்த பிறகு மூஸ்வாலாவின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் அவருடைய உடல் சொந்த கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது இறுதிச் சடங்கு இன்று (மே 31) நடைபெற்று சித்துவுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. இதனையொட்டி, சித்து மூஸ்வாலாவின் ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் கிராமத்தில் குவிந்தனர்.
முன்னதாக சித்து மூஸ்வாலாவுக்கு பணம் பறிக்கும் கும்பல்கள் பல தொடர்ந்து மிரட்டல் விடுத்துவந்ததாகவும், அந்தக் கும்பலில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மீது அதிக சந்தேகம் இருப்பதாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | இதை செய்ய பெண்களுக்கு கணவரின் அனுமதி தேவையில்லை! நீதிமன்றம் அதிரடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR