பாடகர் கேகே உடனான கடைசி மணி நேரங்கள்; வருத்தத்துடன் பகிர்ந்து கொண்ட ரசிகர்
கே.கே.யின் கச்சேரியில் கலந்து கொண்ட குருதாஸ் கல்லூரி மாணவர் ஷிபாசிஸ் பானர்ஜி, அவர் மிக உற்சாகமாக பாடிக்கொண்டிருந்ததாக குறிப்பிட்டார்.
கேகே என்று அழைக்கப்படும் பழம்பெரும் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத், கொல்கத்தாவில் உள்ள கல்லூரியில் இசை நிகழ்ச்சி நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை காலமானார். 53 வயதாகும் பாடகருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கேகேயின் திடீர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்தின் பாடல்கள் பலவிதமான உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும், எல்லா வயதினரையும் கவர்ந்ததாகவும் பிரதமர் மோடி கூறினார். "அவரது பாடல்கள் மூலம் அவரை எப்போதும் அனைவரது நினைவிலும் இருப்பார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் என அழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி" என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.
கே.கே.யின் கச்சேரியில் கலந்து கொண்ட, அவரது ரசிகரும் குருதாஸ் கல்லூரி மாணவர் ஷிபாசிஸ் பானர்ஜி, கச்சேரியின் போது கேகே உற்சாகமாக இருந்ததாகக் கூறினார். கே.கே பல பிரபலமான பாடல்களை மேடையில் பாடியதாக மாணவர் பிடிஐயிடம் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் போது KK-வை சந்தித்ததாகவும், அதனை அவர் நினைவில் வைத்துக் கொண்டு, உடனடியாக அடையாளம் கண்டுகொண்டதாகவும் அவர் கூறினார். "அவர் எங்களுடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார். நாங்கள் கேட்டபோது எங்களுக்கு ஆட்டோகிராப் கொடுத்தார்," என்று அவர் பாடகர் குறித்த கடைசி நேர நிகழ்வுகளை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார் கூறினார்.
மேலும் படிக்க | பிரபல பாடகர் கேகே மாரடைப்பால் காலமானார்
தெற்கு கொல்கத்தாவில் உள்ள தெற்கு கொல்கத்தாவின் நஸ்ருல் மஞ்சாவில் ஒரு கச்சேரியில் கே.கே. நோய்வாய்ப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மிகவும் பிரபலமான பாடல்களைப் பாடினார். பாடகர் தனது ஹோட்டலை அடைந்த பிறகு "பாரமாக உணர்வதாக" கூறியுள்ளார். பின்னர் மயங்கி விழுந்த அவர், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இரவு 10 மணியளவில் கே.கே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர் என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அவரது மரணத்திற்கான காரணத்தை உறுதி செய்வதற்காக புதன்கிழமை பிரேதப் பரிசோதனை நடத்தப்படும்.
கொல்கத்தாவிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்ற கே.கே, திங்கட்கிழமையும் விவேகானந்தா கல்லூரியில் பாடல் கச்சேரி நடத்தினார். அவர் இன்று புதுடெல்லி திரும்புவதாக இருந்தது. பிரபல பாடகரான கேகே, தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.
மேலும் படிக்க | விக்ரம் - முதல் ஷோ பார்க்க ஆசைப்படும் எதிர்க்கட்சி தலைவர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR