2015 -ம் ஆண்டு குஜராத்தில் சக்திவாய்ந்த படிதார் சமூக இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஹர்திக் படேல், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு சற்று முன்பு காங்கிரஸில் சேர்ந்தார். தற்போது அவர் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் படேல் உள்ள நிலையில், கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் தலை தூக்கியுள்ளது. குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உட்கட்சிப்பூசல் காரணமாக ஹர்திக் படேல் கட்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள ஹர்திக் படேல், "பா.ஜ.க.வைப் பற்றி சில நல்ல விஷயங்கள் உள்ளன, அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ள கருத்து காங்கிரசிற்குள் புயலை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் ரீதியாக அவர்கள் வலிமையாக இருப்பதையும், சரியான முடிவெடுப்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஹர்திக் படேல் கருத்து தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | காங்கிரஸ்-க்கு பிரசாந்த் கிஷோரின் ‘மான்ஸ்டர்’ பிளான்! 2024-ம் ஆண்டு பிரதமர் வேட்பாளர் இவரா?


எதிரிகளின் பலத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது எனவும், எதிரிகளின் பலத்தை ஏற்றுக்கொண்டே போரிட வேண்டும் எனவும் ஹர்திக் படேல் கூறியுள்ளார். இருப்பினும் காங்கிரஸை விட்டு வெளியேறும் முடிவில் இல்லை என்றும் ஹர்திக் படேல் கூறினார். 


குஜராத் கட்சித் தலைமை தன்னை ஓரங்கட்டுவதாகவும், தன்னை வெளியேற்ற முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ள அவர், தான் பாஜகவைப் பற்றி நினைக்கவில்லை எனவும், குஜராத் மக்களின் நலன்களைப் பற்றியே விவாதம் உள்ளதாகவும் கூறினார். தனிப்பட்ட முறையில் தனக்கு யார் மீதும் கோபம் இல்லை எனவும், சில விஷயங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் எனவும் ஹர்திக் படேல் கூறினார். ஒருவேளை பாஜகவில் இணைவது போன்ற அரசியல் சூழ்நிலை இருந்தால் அதனைத் தெரிவிப்பேன் எனவும் ஹர்திக் படேல் கூறினார்.


மேலும் படிக்க | காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகிறாரா ப.சிதம்பரம்? காங்கிரஸ் கட்சிக்குள் ஸ்லீப்பர் செல்?


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR