புதுடெல்லி: கொரோனா தொற்று காலத்தில் அரசு, ஊழியர்களுக்கு பல வித நிவாரணங்களை அளித்து வருகிறது. அந்த வகையில் பணியாளர்கள், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் அளித்துள்ள ஒரு உத்தரவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. மத்திர அரசு ஊழியர்களின் பெற்றோருக்கோ அல்லது அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கோ COVID-19 தொற்றுநோய் ஏற்பட்டால், அந்த ஊழியர்கள் 15 நாட்களுக்கான சிறப்பு நேர்வு விடுப்பைப் (SCL) பெற முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"SCL காலாவதியான 15 நாட்களுக்குப் பிறகும் குடும்ப உறுப்பினர்கள் / பெற்றோர்கள் எவரேனும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால், அவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளிவரும் வரை அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கான எஸ்சிஎல்-ஐத் தாண்டி எந்தவொரு வகையான விடுமுறையும் அனுமதிக்கப்படலாம்."  என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


அரசு ஊழியர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களைக் கருத்தில் கொண்டும், இது குறித்து பல வித சந்தேகங்களும் கேள்விகளும் வந்ததைத்  தொடர்ந்தும், COVID-19 தொற்றுநோய்களின் போது சிகிச்சை, மருத்துவமனையில் அனுமதி, தனிமைப்படுத்தப்பட்ட காலம் குறித்த விரிவான உத்தரவை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 


ஒரு அரசு ஊழியர் (Government Employee) கொரோனா தொற்றுக்கு நேர்மறையாக சோதிக்கப்பட்டு அவர் வீட்டு தனிமைப்பாடுத்தலில் இருக்கும்போது அவருக்கு 20 நாட்கள் வரை கம்யூட்டட் விடுப்பு வழங்கப்படும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


ALSO READ: Biological-E தயாரிக்கும் Corbevax மற்ற தடுப்பூசிகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது


ஒரு அரசு ஊழியர் COVID-19-க்கு நேர்மறையாக பரிசோதிக்கப்பட்டு, வீட்டில் தனிமையில் இருந்தால் பின்னர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டிருந்தால், அவருக்கு, தொற்று உறுதியான நாளிலிருந்து 20 நாட்கள் வரை ஒரு காலத்திற்கு பயண விடுப்பு / எஸ்சிஎல் / ஈட்டிய விடுப்பு (EL) வழங்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


"ஊழியருக்கு தொற்று உறுதியாகி 20 வது நாளுக்கு அப்பால் மருத்துவமனையில் இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான ஆவண ஆதாரங்களை காண்பித்த பின்னர் அவருக்கு பயண விடுப்பு (Commuted Leave) வழங்கப்படும்" என்று அனைத்து மத்திய அரசு அமைச்சகங்களுக்கும் வழங்கப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒரு மத்திய அரசு ஊழியரின் பெற்றோர் அல்லது அவரை சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று (Coronavirus) உறுதி செய்யப்பட்டால், அவருக்கு 15 நாட்களுக்கான சிறப்பு நேர்வு விடுப்பு (Casual Leave) வழங்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசு ஊழியர் ஒரு COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரது நேரடி தொடர்பில் வந்து, வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்தால், அவர், "ஏழு நாட்கள் ஆன்-டியூட்டி / வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்" என்று ஜூன் 7 தேதியிட்ட தனது உத்தரவில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் அரசாங்க ஊழியர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தலில் இருந்தால், அந்த கட்டுப்பாட்டு மண்டலம் சரியாகும் வரை, அவர் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. 


இந்த உத்தரவுகள் 2020 மார்ச் 25 முதல் மேலதிக உத்தரவுகள் வரும்வரை பொருந்தும்.


ALSO READ: COVID-19 Vaccine: கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான வழிமுறைகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR