Corona Update: கடந்த 24 மணி நேரத்தில் 92,596 பேருக்கு கோவிட் பாதிப்பு

 இந்தியாவில் COVID-19 பாதிப்பு நேற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. நேற்று 92,596 பேருக்கு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 2219 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  என மத்திய சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 9, 2021, 11:44 AM IST
  • கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து இரண்டாவது நாளாக 1 லட்சத்திற்கும் குறைவு
  • கடந்த 24 மணி நேரத்தில் 92,596 பேருக்கு கோவிட்
  • கடந்த 24 மணி நேரத்தில் 2219 பேர் கொரோனாவுக்கு பலி
Corona Update: கடந்த 24 மணி நேரத்தில் 92,596 பேருக்கு கோவிட் பாதிப்பு title=

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து இரண்டாவது நாளாக 1 லட்சத்தை விட குறைவாகவே உள்ளன. நேற்று 92,596 பேருக்கு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 2219 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  என மத்திய சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,90,89,069 ஐத் தாண்டியது. கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 3,53,528 ஆக அதிகரித்து இருக்கிறது. நேற்று 1,62,664 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதையும் சேர்த்து இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,75,04,126 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது 12,31,415 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

இது இந்தியாவில் கொரோனாவின் ஒட்டுமொத்த பாதிப்பு தரவுகள்:

மொத்த பாதிப்பு: 2,90,89,069
குக்ணமடைந்தவர்களின் எண்ணிக்கை: 2,75,04,126
இறப்பு எண்ணிக்கை: 3,53,528
தற்போதைய உண்மையான கொரோனா பாதிப்பு: 12,31,415  

ஏப்ரல் முதல் தேதிக்கு பிறகு நாட்டில் முதன்முறையாக இந்தியாவில் நேற்று 1 லட்சத்துக்கும் குறைவான கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன.  

Also Read | Black Fungus: மியூகோமிகோசிஸ் பாதிப்பிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது?

செவ்வாய்க்கிழமை மத்திய அரசு தெரிவித்த தரவுகளின்படி, தொடர்ந்து சில மாதங்களுக்கு பெரிய கூட்டங்களைத் தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவின் மூன்றாவது அலைகளைத் தவிர்ப்பதற்கு பொருத்தமான நடத்தைகளைப் பின்பற்றுவது அவசியம் என அரசாங்கம் வலியுறுத்தியது.

தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தியதால்,  நாட்டில் தினசரி புதிய கொரோனா வைரஸ் பாதிப்பில் தொடர்ச்சியான மற்றும் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது என்பதையும் மத்திய அரசு சுட்டிக்காட்டுகிறது. 

கொரோனா தொற்றுநோய் தொடர்பாக பேசிய சுகாதார அமைச்சத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், மே 7 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது என்றும், அதனுடன் ஒப்பிடும்போது, தற்போது பாதிப்பு கிட்டத்தட்ட 79 சதவீதம் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். 

Also Read | தமிழ்நாட்டில் COVID-19 பரவல் வேகம் குறைகிறது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News