Online Gambling Ban Law: ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தமிழ்நாட்டில் தற்கொலைகள் தொடர்ந்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், இன்று மக்களவையில் மத்திய அமைச்சர் அளித்த விளக்கம் முக்கியமானதாக கருதப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவையில் எம்.பி பார்த்திபன் அவர்கள் ஆன்லைன் சூதாட்டம் குறித்து எழுப்பிய கேள்விக்கு, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார். அப்பொழுது சூதாட்டங்களை தங்களது வரம்பிற்கு கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. பந்தயம், சூதாட்டம் இரண்டும் அரசமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் வருகிறது என விளக்கம் அளித்தார்.


மேலும் படிக்க: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க என்ன தயக்கம்?... சீமான் கேள்வி


ஆன்லைன் சூதாட்டமும் தமிழகமும்:


தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால், தமிழ்நாட்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துக்கொண்டனர். அதுவும் குறிப்பாக இளைஞர் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் குரல்கள் ஒலித்தன. இதனையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்க முடியாது' எனக்கூறி அப்போதைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்தது. 


இதனையடுத்து உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் 'ஆன்லைன் சூதாட்டம்' தொடர்பான அறிக்கை அளிக்க குழு நியமிக்கப்பட்டது. அந்தகுழு கடந்தாண்டு ஜூன் 27 ஆம் தேதி தங்கள் அறிக்கையை சமர்பித்தது. அதன்பிறகு தற்போதைய ஆளும் திமுக அரசு சார்பில் 'ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்டதிற்கு கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில், இந்த அவசர சட்டம் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.


மேலும் படிக்க: ஆன்லைன் சூதாட்ட கொடுமைகளுக்கு முடிவு எப்போது? PMK கேள்வி


அதன்பிறகு நடந்த சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரில், அவசர சட்டத்துக்கு மாற்றாக, சட்ட மசோதாவை அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். அக்டோபர் 19 ஆம் தேதி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு மாத கணக்காகியும் கையெழுத்திடாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்தார். அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி ஆளுநரை சந்தித்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்டமசோதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். மேலும்  ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஆளுநர் சந்தித்துப் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


இதற்கிடையில், ஐந்து மாதம் கழித்து கடந்த 8 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இந்த மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: ஆன்லைன் ரம்மிக்கு பிரபலங்கள் கூவுகிறார்கள் - மூத்த நடிகர் காட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ