தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் பிரபலமானவர் ராஜ்கிரண். அவரது நடிப்புக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.குறிப்பாக சேரன் இயக்கத்தில் வெளியான தவமாய் தவமிருந்து படத்தில் ராஜ்கிரண் ஏற்றிருந்த முத்தையா கதாபாத்திரம் ஒரு க்ளாஸிக். அதேபோல் நந்தா படத்தில் அவர் ஏற்றிருந்த பெரியவர் கதாபாத்திரமும். ராஜ்கிரண் நடிப்பு மட்டுமின்றி சமூக அக்கறை உள்ள விஷயங்களிலும் அவர் தனித்து தெரிகிறார். வேட்டி சம்பந்தமான விளம்பரங்கள் பற்றி ராஜ்கிரண் கூறிய கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்தச் சூழலில் ஆன்லைன் ரம்மி குறித்து ராஜ்கிரண் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சீட்டாட்டத்தினால் ஏற்படும் வெறியும், போதை போன்ற மயக்கமும் அந்தப்பழக்கத்தை தொட்டவரை விடவே விடாது. சீட்டாட தேவைப்படும் பணத்துக்காக எவ்வித கீழ்நிலைக்கும் போவதற்கு தயங்கமாட்டார்கள், அதற்கு அடிமையானவர்கள். இதில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான், "எல்லாமே என் ராசாதான்" என்று, ஒரு படமே எடுத்தேன்.
அந்தக் காலகட்டங்களில் சீட்டாடுவது சட்டப்படி குற்றமாயிருந்தது. "காவல் துறை கைது செய்தால் கேவலமாகிவிடுமே" என்ற பயமும் இருந்தது. ஆனால், இப்போது சீட்டாட்டம் டிஜிட்டல் மயமாகி, "ஆன்லைன் ரம்மி" என்ற பெயரில், காவல் துறையைப்பற்றிய பயமில்லாமல், எல்லோரும் ஆடலாம் என்றாகி, இந்த சமூக சீர்கேட்டிற்கு, பிரபலங்கள் எல்லாம், பாமர மக்களை, ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டு, கூவிக்கூவி அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
இதுவரை நம் தமிழ்நாட்டில் மட்டும் 37 உயிர்கள் பலியாகியிருக்கின்றன. 37 குடும்பங்கள் பரிதவித்துக்கிடக்கின்றன. தமிழக அரசு, இந்த நாசகார, உயிரோடு விளையாடும் விளையாட்டைத்தடுக்க சட்டம் இயற்றியும், அதை செயல் படுத்த முடியாமல், முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன” என தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, ஆன்லைன் ரம்மியில் நடிப்பது ஏன் என சரத்குமாரிடம் கேட்கப்பட்டபோது, “நான் சமகவுக்கு ஓட்டு போடச்சொல்கிறேன் யாரும் ஓட்டு போட்டார்களா? அப்படி இருக்கும்போது நான் ரம்மி விளையாட சொன்னால் எப்படி விளையாடுவார்கள். ரம்மி அறிவுப்பூர்வமான விளையாடு” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata