நீட் தேர்வை ஒத்தி வைக்கக்கோரிய மனு.. தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்தி வைக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை ஒத்தி வைக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மருத்துவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதற்கு மேலும் முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்தி வைப்பது பல குழப்பங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும் படிக்க | NEET PG 2022 ஒத்திவைப்பு தொடர்பான மனு: உச்ச நீதிமன்ற விசாரணை
கடந்த ஆண்டு நீட் தேர்வு நான்கு மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் தடம் புரண்டுள்ள மருத்துவ மாணவர் சேர்க்கையை மீட்டெடுக்க முயன்று வரும் நிலையில், தேர்வை மீண்டும் ஒத்தி வைப்பது மருத்துவர்களின் எண்ணிக்கை குறைய வழிவகுக்கும் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ள நிலையில் தேர்வை ஒத்தி வைத்தால் குழப்பம் ஏற்படும் எனவும், நோயாளியின் நலனையே பிரதானமாகக் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்து, முதுநிலை நீட் தேர்வை தள்ளிவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR