மோடி பெயர் விவகாரம்: ராகுல் காந்தியின் மனுவை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
No Relief For Rahul Gandhi: ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது சூரத் நீதிமன்றம். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து காங்கிரஸ் ஆலோசனை.
Rahul Gandhi Case Updates: இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு தடை கோரிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் மனுவை சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு. சூரத் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து வயநாடு முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி, இனி குஜராத் உயர்நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
வயநாட்டின் மக்களவை எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி, பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி தாக்கல் செய்த வழக்கில், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 499 மற்றும் 500 (அவதூறு) ஆகிய பிரிவுகளின் கீழ் மார்ச் 23 அன்று சூரத்தில் உள்ள கீழ் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம்:
2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, மார்ச் 24 ஆம் தேதி, ராகுல் தனது எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதாவது சுப்ரீம்கோர்ட் தீர்ப்பின்படி, எந்தவொரு எம்பி அல்லது எம்எல்ஏவும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் தானாகவே தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
30 நாட்களுக்குள் மேல்முறையீடு:
முன்னதாக ஏப்ரல் 3 ஆம் தேதி, இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் முன்னாள் தலைவருக்கு சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதாவது ராகுல்காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டவுடனேயே, அவருக்கு ஜாமீன் வழங்கிய சூரத் நீதிமன்றம் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியிருந்தது. இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதித்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல் முறையீடு செய்திருந்தார்.
மேலும் படிக்க: அதானியை காப்பாற்ற ராகுல்காந்தியை பழிவாங்கும் மோடி அரசு - தமிழக காங்கிரஸ்
பாஜக அரசு செய்த சூழ்ச்சி -காங்கிரஸ்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்பியுமாக இருந்த ராகுல் காந்திக்கு அண்மையில் சூரத் நீதிமன்றம் அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை விதித்தது. சுதந்திர இந்தியாவில் அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள், இதுவரை யாருக்கும் விதிக்கப்படாமல் இருந்த நிலையில், முதன்முறையாக அதிகபட்ச தண்டை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டது. இதனால் உடனடியாக எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பாஜக இதனை நீதிமன்ற நடவடிக்கை என்றாலும், அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேசக்கூடாது என்பதற்காக மத்திய பாஜக அரசு செய்த சூழ்ச்சி என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.
எதற்காக ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டது?
2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, கர்நாடகா மாநில பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுப்பெயர் எப்படி வந்தது? என கேள்வி எழுப்பினார். இது ஒரு குறிப்பிட்ட ஜாதியை அவதூறு செய்வதாகக் கூறி, பாஜக எம்எல்ஏவும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் அடிப்படையில் கீழமை நீதிமன்றம் ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கியிருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ