காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்பியுமாக இருந்த ராகுல் காந்திக்கு அண்மையில் சூரத் நீதிமன்றம் அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை விதித்தது. சுதந்திர இந்தியாவில் அவதூறு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள், இதுவரை யாருக்கும் விதிக்கப்படாமல் இருந்த நிலையில், முதன்முறையாக அதிகபட்ச தண்டை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டது. இதனால் உடனடியாக எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பாஜக இதனை நீதிமன்ற நடவடிக்கை என்றாலும், அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேசக்கூடாது என்பதற்காக மத்திய பாஜக அரசு செய்த சூழ்ச்சி என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.
மேலும் படிக்க | PM Modi: பிரதமர் மோடி வருகை... சென்னையில் எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம் தெரியுமா?
இதனையொட்டி தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றன. வேலூரில் பிரதமர் மோடி அரசைக் கண்டிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்யாகிரக போராட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் இந்தப் போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர். இதன்பிறகு காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் டீக்காராமன், மத்திய பாஜக அரசின் ஊழல்களை ராகுல்காந்தி பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டி வந்தார். அவரின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்கவில்லை. இதனால் பொதுவெளியில் பேசத் தொடங்கிய ராகுல்காந்தி, அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் மீண்டும் பேச திட்டமிட்டிருந்தார். இதனை தடுக்கும் வகையில் அவருடைய எம்பி பதவி பறிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் தலைச்சிறந்த விமான நிலையங்களின் பராமரிப்பு உள்ளிட்ட நிர்வாகம் அனைத்தும் அதானிக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பும். அதானி ஒருவருக்கே அரசின் மிகப்பெரிய டெண்டர்கள் கொடுக்கப்படுவது ஏன்?, அதானி ஷெல் கம்பெனிகளின் முதலீட்டில் 20 ஆயிரம் கோடி எப்படி வந்தது?, இதனை முதலீடு செய்தவர்கள் யார்? என்ற கேள்விக்கு பாஜகவிடம் பதில் இல்லை. இது குறித்து கேள்விகளுக்கு பதில் இல்லாத காரணத்தால் ராகுல்காந்தியை மத்திய அரசு பழிவாங்குகிறது என்று குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய டீக்காராமன், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட காங்கிரஸ் கட்சி உழைக்கும் என தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ