வாழ்க்கையில் அனைவருக்கும் துணை தேவைப்படுகிறது. தனியாக வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கை பலருக்கு இருந்தாலும் சில தருணங்களில் ஆறுதலாய் கை கொடுக்க, ஆதரவாய் தோள் கொடுக்க, பாரங்களை பகிர்ந்துகொள்ள ஒரு துணையின் தேவை அவசியமாகிறது. இதை புரிந்துகொண்ட ஒரு மகள் செய்துள்ள ஒரு நெகிழ்வான செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரதிமேனன். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், ரதிமேனன் தனிமையில் வசித்து வந்தார். இந்தநிலையில் தனது தாயார் தனிமையில் தவித்து வருவதை உணர்ந்த ரதிமேனனின் மகள் பிரசிதா, கண்டிப்பாக தனது தாயாருக்கு ஒரு துணை வேண்டும் என்று சிந்திக்கத்தொடங்கினார். 


ஆகையால், தனது தாய்க்கு திருமணம் செய்து வைக்க அவர் முடிவு செய்தார். இதற்காக தகுந்த மணமகனை தேட ஆரம்பித்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த திவாகரன் என்பவர்தான் தனது தாய்க்கு ஏற்ற துணை என்று பிரசிதா முடிவு செய்தார். 


மேலும் படிக்க | மகளின் ஆசை: கிருஷ்ணர் வேடமிட்டு மகிழ்ந்த இஸ்லாமிய தம்பதியினர் 


2 மகள்களுக்கு தந்தையான திவாகரன் வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர் ஆவார். அவரிடம் தனது தாயின் தனிமை பற்றியும், அவருக்கு ஒரு துணை வேண்டும், அது நீங்களாக இருந்தால் மிகவும் நல்லது என்று உருக்கமாக கூறினார் பிரசிதா. இதனை புரிந்து கொண்ட திவாகரன் 2-வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். திவாகரனின் மனநிலை குறித்து அவரது 2 பெண் குழந்தைகளிடமும் பிரசிதா பேசினார். அவர்களும் தந்தையின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இதை தொடர்ந்து தனது தாய் ரதிமேனனின் சம்மதத்தை பெற்ற அவர் திருச்சூர் திருவம்பாடி கோவிலில் இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்தார். 


அதன்படி உற்றார் உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி முடித்தார். தாய்க்கு 2 ஆவது திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த பிரசிதா, "எனது அம்மாவுக்கு நாங்கள் 2 பெண் குழந்தைகள். அப்பா உயிரோடு இருக்கும்போதே எங்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. நாங்கள் அவரவர் கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் அப்பா திடீரென்று மரணம் அடைந்ததால் அம்மா தனியானார். 


எங்களுக்கும் கணவர், குழந்தைகள் என ஆனதால் அம்மாவை அடிக்கடி நேரில் வந்து பார்க்க முடியவில்லை. அம்மாவின் தனிமை நிலையை போக்க வேண்டும் என்று யோசித்தேன். அதற்காகத்தான் இந்த திருமண ஏற்பாடு செய்யப்பட்டது" என்று கூறினார்.


தனிமையில் இருக்கும் தனது தாய்க்காக, இப்படி வித்தியாசமாக சிந்தித்து வயதான காலத்தில், அவருக்கு ஒரு துணையை ஏற்படுத்திக் கொடுத்த மகளை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


மேலும் படிக்க | குடும்ப பிரச்சனை காரணமாக தந்தையை கொலை செய்த மகன் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ