வைரல் வீடியோ: இணையத்தில் தினமும் பல வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. இந்த வீடியோக்களில் சில மிகவும் அழகானவையாகவும் உணர்ச்சிகரமாகவும் இருக்கின்றன. இவை மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன. கணவன் மனைவி அல்லது மணமகன் மணமகள் இடையில் இருக்கும் காதலையும் பாசத்தையும் காட்டும் பல வீடியோக்களை நாம் பார்த்துள்ளோம். இவை சமூக ஊடகங்களிலும் பெரும் வரவேற்பை பெறுகின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இது ஒரு கணவன் மனைவி ஜோடியின் வீடியோ. ஆனால், இந்த வீடியோவில் மிகவும் வித்தியாசமான கியூட்டான ஒரு காட்சி காணக்கிடைக்கின்றது.
கணவன் மனைவி உறவில் அதிக அன்பும் இணக்கமும் இருக்கும். இந்த உறவுக்கு வயது ஒரு தடை இல்லை. 44 ஆண்டுகளாக ஒருவரோடொருவர் பாசத்தோடு வாழ்ந்து வரும் ஒரு ஜோடியின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. சந்தோஷமோ, துக்கமோ எதுவாக இருந்தாலும், இருவரும் ஒருவருக்கொருவர் அனைத்தையும் பகிர்ந்து கொண்டு பல வருடங்களை நிறைவு செய்கின்றனர். இந்த வீடியோவை பார்க்கும் அனைவரது முகத்திலும் புன்னகை மலர்கிறது.
மேலும் படிக்க | ‘சும்மா இருக்க மாட்ட?’: கடுப்பாகி கிளாஸ் எடுத்த கிங் கோப்ராவின் வைரல் வீடியோ
தன் காதலை வெளிப்படுத்தினார் முதியவர்
முதியவர் ஒருவர் முழங்காலில் மண்டியிட்டு தனது மனைவியை ப்ரோபோஸ் செய்வதை வீடியோவில் காண முடிகின்றது. வயது காரணமாக, அவர் மண்டியிட சிரமப்படுவது வீடியோவில் நன்றாகத் தெரிகிறது. இருப்பினும் அவர் தனது அன்பை வெளிப்படுத்த மீண்டும் ஒரு முறை தனது மனைவியை பிரபோஸ் செய்கிறார். தன் மனைவி மீது அவருக்கு இருக்கும் காதலும் பாசமும் இந்த வீடியோவில் நன்றாகத் தெரிகின்றது.
இணையவாசிகளை இளக வைத்த அந்த வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
44 ஆண்டுகள் நிறைவு
இந்த வீடியோவின் தலைபில், இருவரும் இணைந்து 44 ஆண்டுகள் நிறைவடைந்ததாக எழுதப்பட்டுள்ளது. முதியவர் கையில் ரோஜாப் பூவை வைத்திருக்கிறார். பல பயனர்களுக்கு முதியவரின் இந்த காதல் பாணி மிகவும் பிடித்திருக்கிறது. இந்த வீடியோவை பார்த்து பலரும் கமெண்ட் செக்ஷனில் ஹார்ட் எமோஜிகளை அனுப்பி உள்ளனர்.
வீடியோ வைரலானது
இந்த வீடியோ சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்த்து பலரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ பல முறை மீண்டும் மீண்டும் பார்க்கப்பட்டுள்ளது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் வீடியோவை லைக் செய்துள்ளனர்.
மேலும் படிக்க | Viral Wave: கல்யாண ஏற்பாடுகளை காலி செய்த கடலலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ