Pakistan Army Exposed: ரஜோரியின் நவ்ஷேரா செக்டரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே ஆகஸ்ட் 21 அன்று நடந்த என்கவுன்டரில் பிடிபட்ட தபாரக் ஹுசைன் மூலம், பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்கள் அம்பலமானது. 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து, இந்திய ராணுவத்தை தாக்கும் வேலையை கொடுத்ததாக அந்த பயங்கரவாதி தெரிவித்தது, இந்தியாவின் அண்டை நாட்டின் கெட்ட எண்ணத்தை வெளிப்படுத்தியிஅது. தான் தற்கொலை குண்டுதாரியாக அனுப்பப்பட்டதாகவும், பாகிஸ்தான் ராணுவத்தின் கர்னல் யூனுஸ் சுமார் 30,000 ரூபாய்க்கு தன்னை பணியமர்த்தியதாகவும் அவர் தெரிவித்தார். தீவிரவாதி தபாரக் ஹுசைன் ANI செய்தி நிறுவனத்திடம் பல்வேறு திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்தார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

”நாங்கள் 4-5 பேர் வந்தோம், பாகிஸ்தான் ராணுவத்தின் கர்னல் யூனுஸ் எங்களை அனுப்பியிருந்தார். எங்களுக்கு பணம் கொடுத்தார்கள். இந்திய ராணுவத்தின் ஓரிரு நிலைகள் மீது தாக்குதல் நடத்துமாறு அறிவுறுத்தி இருந்தார்கள்” என்று ஆகஸ்ட் 21 அன்று, ரஜோரியின் நவ்ஷேரா செக்டரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே என்கவுன்டரில் பிடிபட்ட தபாரக் தெரிவித்தார்.


 மேலும் படிக்க | சாலையோரம் வீசப்படும் பச்சிளம் குழந்தைகள் - உண்மையில் இதன் உளவியல் பிரச்சனைகள்தான் என்ன ?


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள கோட்லியின் சப்ஸ்கோட் கிராமத்தில் வசிப்பவர் தபாரக். கடந்த 6 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக, எல்லை தாண்டி இந்தப் பகுதிக்குள் ஊடுருவ முயன்றபோது ஹுசைன் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் பாகிஸ்தான் ராணுவத்தின் உளவுப் பிரிவிலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆகஸ்ட் 21 அன்று, ஜங்கரில் நியமிக்கப்பட்ட உஷார் பணியாளர்கள் (alert personnel), எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் மறுபுறத்தில் இருந்து இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் நடமாடுவதைக் கவனித்ததாக இந்திய ராணுவத்தின் 80 காலாட்படை படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கபில் ராணா தெரிவித்தார்.


பயங்கரவாதி ஒருவர் இந்திய ராணுவ நிலை அருகே வந்து வேலியை வெட்ட முயன்றார். உடனே அங்கு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். இருப்பினும், தப்பியோட முயன்றவர்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் தபாரக் காயமடைந்தார். அவருடன் இருந்த இரண்டு பயங்கரவாதிகள் அடர்ந்த காட்டிற்குள் தப்பித்துச் சென்றுவிட்டனர்.


மேலும் படிக்க | 'பாரத ரத்னா' கொடுக்கப்பட வேண்டிய மணீஷ் சிசோடியாவை கைது செய்ய துடிக்கிறது மத்திய அரசு -கேஜ்ரிவால்


காயமடைந்த பாகிஸ்தான் பயங்கரவாதி உயிருடன் பிடிபட்டதாகவும், அவருக்கு உடனடி மருத்துவ உதவி மற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் இந்திய ராணுவ அதிகாரி தெரிவித்தார்.


பிடிபட்ட பயங்கரவாதி தபாரக்கிடம் நடத்திய விசாரணையில், PoK யில் உள்ள கோட்லியின் சப்ஜ்கோட் கிராமத்தில் வசிக்கும் ஹுசைன் என்று தெரிவித்ததாக காட்டியதாக பிரிகேடியர் ராணா கூறினார்.


அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்திய ராணுவ நிலையின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதை பயங்கரவாதி ஒப்புக்கொண்டான்.பாகிஸ்தான் உளவுத்துறையின் கர்னல் யூனுஸ் சவுத்ரி தனக்கு ரூ.30,000 (பாகிஸ்தான் கரன்சி) கொடுத்ததாக ஹுசைன் தெரிவித்தார்.


மேலும் படிக்க | NDTV பங்குகளை மறைமுகமாக வாங்கி ஊடகத்தில் ஊடுருவும் அதானி நிறுவனம் பின்னணி


ஹுசைன் நீண்டகாலமாக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக் கொண்டார். பாகிஸ்தான் இராணுவத்தின் மேஜர் ரசாக் தனக்கு பயிற்சி அளித்ததாக கூறினார். ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தபாரக், செய்தியாளர்களிடம் பேசினார். ”நான் (சக பயங்கரவாதிகளால்) காட்டிக் கொடுக்கப்பட்டேன், இந்திய ராணுவத்தால் பிடிபட்டேன்” என்று தெரிவித்தார்.


ஹுசைனுக்கு ஆறு மாத பயிற்சி கொடுக்கப்பட்டதாகவும், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது உறுப்பினர்களுக்காக பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் பல பயங்கரவாத முகாம்களுக்கும் அவர் சென்றிருப்பதாகவும் தெரிகிறது. ஹுசைனின் உடல்நிலை சீராக உள்ளதாக ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கமாண்டன்ட் பிரிகேடியர் ராஜீவ் நாயர் தெரிவித்தார்.


இந்திய ராணுவத்தினரை தாக்குவதற்காக வந்த அவருக்கு, இந்திய ராணுவத்தினரே ரத்தம் கொடுத்து காப்பாற்றி உள்ளனர். தங்கள் கைகளால் அவருக்கு உணவளித்து தீவிரவாதியின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டபோது கூச்சலிட்ட தபாரக், என்னை காட்டிக் கொடுத்துவிட்டார்கள், என்னை கொன்றுவிடுங்கள் என்றும் சொன்னதாக இந்திய ராணுவம் தெரிவிக்கிறது. 


மேலும் படிக்க | ரீல்ஸ் மோகத்தில் சிறுவனின் விபரீத விளையாட்டு: போலீசிடமே கைவரிசை


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ