ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் மூன்று பாஜக தொண்டர்களை கொன்ற பயங்கரவாதிகள்
அதிர்ச்சி! ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மூன்று பாரதிய ஜனதா கட்சி (BJP) தொண்டர்களைக் கொன்றனர்.இது குறித்து ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதிர்ச்சி! ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மூன்று பாரதிய ஜனதா கட்சி (BJP) தொண்டர்களைக் கொன்றனர்.இது குறித்து ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவத்தில், ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் மூன்று பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களை சுட்டுக் கொன்றனர். வியாழக்கிழமையன்று, குல்கம் மாவட்டத்தின் காசிகுண்ட் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒய்.கே.போரா-வில் (YK Pora) உள்ள ஒரு கிராமத்தில் இரவு 8.20 மணியளவில் பயங்கரவாதிகள் மூன்று பாஜக தொண்டர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக ஜம்மு-காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
ஒய்.கே.போராவில் உள்ள வசிக்கும் பாஜக தொண்டர் Fida Hussain Yatoo சுட்டுக் கொள்ளப்பட்டவர்களில் ஒருவர். இவர் பி.ஜே.பியின் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர். உமர் ரஷீத் பிய்க், இவர் சோபர் தேவ்சர் என்ற இடத்தைச் சேர்ந்தவர், உமெர் ரம்ஜான் ஜாஜன் ஆகிய மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர்கள் இறந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஒய்.கே.போராவில் வசிக்கும் குலாம் அஹ்மத் யடூவின் மகன் ஃபிதா உசேன் யடூ, சோபாத் தேவ்சரின் வசிக்கும் அப்துல் ரஷீத் பீயின் மகன் உமர் ரஷீத் பீ என மூன்று பாஜக தொண்டர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், ஸ்ரீநகரில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் இந்த கொலைகளை கண்டித்தார். காட்டுமிராண்டித்தனமான நடத்தை என்று சாடினார். காரில் இருந்தபோது பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், அவர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபப்ட்டனர். அங்கு அவர்கள் மூவரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு படையினரின் கூட்டுக் குழு இப்போது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய முழுப் பகுதியையும் சுற்றி வளைத்துள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR