மோடி அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: RSS விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
R.S.S அமைப்பின் விவசாயிகள் பிரிவான பாரதிய கிசான் சங்கம் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக செப்டம்பர் 8ஆம் தேதியன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்
ஆர்.எஸ்.எஸ் (R.S.S) அமைப்பின் விவசாயிகள் பிரிவான பாரதிய கிசான் சங்கம் (Bharatiya Kisan sangam) பிரதமர் மோடி அரசுக்கு எதிராக செப்டம்பர் 8ஆம் தேதியன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வேளாண் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென்றும் இந்த கோரிக்கைகளின் மீது நல்ல முடிவை எடுக்க மோடி அரசுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை "காலக்கெடு விதிப்பதாகவும் இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் செப்டம்பர் 8இல் நாடு தழுவிய போராட்டத்தை அறிவிக்க போவதாகவும் பாரதிய கிசான் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தப் போராட்டம் குறித்து உத்திரப்பிரதேசம் (Uttar Pradesh) மாநிலம் பல்லியாவில் பாரதிய கிசான் சங்கத்தின் பொருளாளர் யுகல் கிஷோர் மிஸ்ரா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான அரசு "நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களிலும் திருத்தங்கள் செய்ய வேண்டும்.அதிலுள்ள சிக்கல்களை கையாள்வதற்கு தனியாக ஒரு குழுவினை அமைக்க வேண்டும். வேளாண் விற்பனைக்கென்று மண்டிக்கு உள்ளேயும், வெளியேயும் விவசாயிகளிடமிருந்து வாங்கும் பொருட்களுக்கு வங்கி உத்தரவாதங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்.
ALSO READ | PM Kisan Samman Nidhi Yojana: உங்கள் தவணை கிடைத்துவிட்டதா என அறிவது எப்படி..!!
"வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு தற்போது உரிய விலை கிடைப்பதில்லை! குறைந்த பட்ச ஆதார விலையும் சரிவர கிடைப்பது இல்லை.எனவே வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க வழிவகை செய்வதற்கான சட்டம் இயற்ற வேண்டும் என இந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி அடுத்த மாதம் நாடு தழுவிய போராட்டத்தை நடத்த போவதாக யுகல் கிஷோர் மிஸ்ரா செய்தியாளர்களிடையே கூறினார்.
பா.ஜ.க வை வழிநடத்துவதே ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு தானே எதற்காக இந்த நாடகம் என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு "மோடி அரசை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வழி நடத்தவில்லை என்றும் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆட்சி அமைத்த எந்த ஒன்றிய அரசும் விவசாயிகளுக்கு ஒரு நன்மையும் செய்யவில்லை. அது வாஜ்பாய் அரசாகட்டும் அல்லது மோடி அரசாகட்டும் "விவசாயிகளுக்கு என்று ஒரு நன்மையும் செய்யவில்லை. இந்த காரணத்திற்காக தான் நாங்கள் செப்டம்பர் 8ஆம் தேதி அன்று விவசாயிகளின் நன்மைக்காக நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்து உள்ளோம். என்று யுகல் கிஷோர் மிஸ்ரா கூறினார்.!!
ALSO READ | இந்தியாவில் இருந்து வெளியேறியது Yahoo! இனி Yahoo Mail நிலை என்ன..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR