மக்கள் தொகை பெருக்கம் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணம்: யோகி ஆதித்யநாத்

உலக மக்கள் தொகை தினமான இன்று (ஜூலை 11 ), 2021-30  ஆண்டுகளுக்கான புதிய மக்கள் தொகைக் கொள்கையை (New Population Policy 2021-30) முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்  (Yogi Adityanath) வெளியிடுகிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 11, 2021, 12:18 PM IST
  • இரு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ளும் தம்பதியினருக்கு பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • IIM, AIIMS போன்ற கல்வி நிறுவனங்களில் முன்னுரிமை, பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி போன்ற சலுகைகள் வழங்கப்படும்.
  • ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்பவர்களுக்கு கூடுதலாக இலவச சிகிச்சை வழங்கப்படும்.
மக்கள் தொகை பெருக்கம் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணம்: யோகி ஆதித்யநாத் title=

இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் 21 கோடி பேர் வசிக்கின்றனர்.  இந்நிலையில், அனைத்து குடிமக்களுக்கும் சிறந்த வகையில் வசதிகளை வழங்க மக்கள் தொகை கட்டுப்பாடு (Population Control) அவசியம் எனவும், மக்கள் தொகை பெருக்கம் தான் அனைத்து பிரச்சனைகளுக்கு மூல காரணமாக உள்ளது எனவும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தி வரும் நிலையில், அதிகரித்து வரும் மக்கள்தொகையை  கடுப்படுத்த உத்தர பிரதேச அரசு ஒரு வரைவு மசோதாவை தயாரித்துள்ளது.  

உலக மக்கள் தொகை தினமான இன்று (ஜூலை 11 ), 2021-30  ஆண்டுகளுக்கான புதிய மக்கள் தொகைக் கொள்கையை (New Population Policy 2021-30) முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்  (Yogi Adityanath) வெளியிடுகிறார்.

இதில் இரு குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்[பவர்களுக்கு சலுகைகள் பல அளிக்கப்படுகின்றன. ஒரு குழந்தை பெற்ற பின் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களுக்கு, முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருப்பின் 80 ஆயிரம் ரூபாயும் பெண் குழந்தையாக இருப்பின் 1 லட்ச ரூபாயும் அளிக்கப்படும் என்றும் புதிய மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 அதே போன்று இரண்டும் மேற்பட்ட குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கு அரசு சலுகைகள் இருக்காது.  அரசு பணியில் சேர இயலாது. மாநில அரசின் நலத் திட்டங்கள் கிடைக்காது. உள்ளூர் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்படுவதோடு, அரசு பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும் கிடைக்காது என வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.  அரசு வேலையில் சேரும் போது இரண்டு குழந்தை இருப்பின் அவர்கள், இந்த புதிய மக்கள் தொகை கொள்கைக்கு எதிராக செயல் பட மாட்டோம் என்ற உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே உள்ளாட்சி நிர்வாகத்தில் அல்லது  அரசு பணியில் இருப்பவர்களுக்கு பொருந்தாது. 

ALSO READ | அமைச்சர்கள் தேவையற்ற கருத்துக்களை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்தவும்: பிரதமர் மோடி

இந்த வரைவு மசோதா குறித்து மக்கள் கருத்தை அறிய மக்கள் மத்தியில் கருத்துக்களை கேட்டறிந்து கொண்ட பின் ஜூலை 19ஆம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ளும் தம்பதியினருக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு வீடு கட்டவும், வாங்கவும் குறைந்த வட்டியில் கடன் வசதி, மின் கட்டணம், குடிநீர், வீட்டு வரி ஆகியவற்றில் சலுகை அளிக்கப்படும். கூடுதலாக சம்பளத்துடன் கூடிய 12 மாத பேறுகால விடுப்பு ஆகியவை வழங்கப்படும்.

மேலும், ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்பவர்களுக்கு கூடுதலாக இலவச சிகிச்சை வழங்கப்படுவதோடு, IIM, AIIMS போன்ற கல்வி நிறுவனங்களில் முன்னுரிமை, பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி போன்ற சலுகைகள் வழங்கப்படும். 

ALSO READ | தனது தளத்தில் போடப்படும் பதிவுகளுக்கு பேஸ்புக் பொறுப்பேற்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News