நாட்டில் கொரோனா தொற்றுநோயைச் சமாளிக்க பல அமைப்புகள் தங்களது நிலையில் நிர்வாகத்திற்கு உதவுகின்றன. ஏழைகளுக்கு உணவு கொடுப்பது, புலம்பெயர்ந்தோரை அவர்களுடைய சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வது என பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் சில அமைப்புகளின் தொண்டர்கள், நேரடியாக களத்திற்கு சென்று ஆபத்தான பணிகளை மேற்கொள்கின்றனர். தெர்மல் ஸ்க்ரீனிங் போன்ற பணிகளில் அரசாங்கத்திற்கு உதவுகின்றனர்.   மகாராஷ்டிராவில், ராஷ்டிரிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பொதுமக்களிடையே வந்து, கொரோனாவுக்கு எதிரான போராட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா நோயாளிகளைத் கண்டறிவதற்கான பெரிய அளவிலான வெப்ப பரிசோதனை பணிகளில் மும்பையின் ஆர்.எஸ்.எஸ்ஸின் பொது நலக் குழுவான Niramaya Seva Foundation and Sevankur என்ற அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது. இந்த ஆர்.எஸ்.எஸ் குழுவின் செயல்பாட்டாளர்கள், மும்பை மாநகராட்சியுடன் சேர்ந்து கட்டுப்பாட்டு மண்டலத்தில் தெர்மல் ஸ்க்ரீனிங் செய்யும் பணிகளை மேற்கொள்கின்றனர். இந்த பிரச்சாரத்தைத் தொடங்கிய இந்தக் குழு, ஒரே நாளில் 10,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வெப்ப பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. 


READ | சீனாவை விட மகாராஷ்டிராவில் அதிக கொரோனா தொற்று பாதிப்பு.. மொத்தம் 85,975


மும்பையின் கட்டுப்பாட்டு மண்டலத்தில் 50 வெவ்வேறு இடங்களில் 4 உறுப்பினர்கள் கொண்ட குழு இந்த பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த குழுவில் ஒரு மருத்துவரும் இணைந்துள்ளார்.


முன்னதாக, ஆர்.எஸ்.எஸ் ஆர்.எஸ்.எஸ் கொரோனா இல்லாத மும்பை என்ற 'Volunteer for Corona Open Mumbai Campaign'   பிரச்சாரத்தைத் தொடங்கியது. தொற்றுநோயைத் தடுக்க வேலை செய்பவர்களுடன் இணைவதற்காக ஆர்.எஸ்.எஸ்ஸின் மும்பை பிரிவு ஒரு ஆன்லைன் படிவத்தை வெளியிட்டது  . மும்பையில் COVID-19 திரையிடலுக்காக உள்ளூர் நிர்வாகத்துடன் ஒரு சமூக பிரச்சாரத்தை நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ், 'தேசத்திற்கான ஒரு வாரம்' பிரச்சாரத்தில் இணையுமாறு கோரிக்கை விடுக்கிறது. நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த பணிக்கு தேவையான பயிற்சி தரவும் ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது.


இந்த முழு நடவடிக்கையிலும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பிரச்சாரத்தில் பங்கேற்கும் மக்களுக்கு பிபிஇ கிட்கள், முகக்கவசங்கள், சுத்திகரிப்பு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதோடு தனிநபர் இடைவெளி என்ற சமூக விலகல் விதிகளைப் பின்பற்றுகிறார்கள்.  இது பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.  


READ | கொரோனாவுக்கு பின் திறக்கப்படும் கோயில்கள் பாதுகாப்பானதா?


மும்பையைப் போலவே, புனேவிலும், 900 க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்கள் புனே முனிசிபல் கார்ப்பரேஷனுடன் இணைந்து ஹாட்ஸ்பாட் பகுதிகளில் நோயாளிகளைத் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் குடிசைப் பகுதிகளுக்குச் சென்று ஸ்க்ரீனிங் பணிகளைச் செய்கிறார்கள். இதனால் கொரோனா நோயாளிகளை அடையாளம் காண முடியும், அவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான சிகிச்சையை வழங்க முடியும்.  


(மொழியாக்கம்: மாலதி தமிழ்ச்செல்வன்)