கொரோனாவுக்கு பின் திறக்கப்படும் கோயில்கள் பாதுகாப்பானதா?

கொரோனாவின் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக இரண்டரை மாதங்களுக்கும் மேலாக பூட்டப்பட்டிருந்த ஆலயங்களின் கதவுகள் தற்போது, பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளன.  கொரோனா நெருக்கடியில் இருந்து நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது.   நாட்டி ன் கிட்டத்தட்ட அனைத்து கோயில்களையும் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் முடிவடைந்துவிட்டன.   தலைநகர் டெல்லியின் பெரிய மற்றும் புகழ்பெற்ற ஆலயங்களுக்கும், மசூதிகளுக்கும் மக்கள் இனிமேல் செல்லலாம்.  அதற்கான முன்னேற்பாடுகள் முடிந்துவிட்டன.  முதலில்  டெல்லியின் புகழ்பெற்ற ஜண்டேவாலன் கோயிலுக்குச் சென்று, அங்கு செய்யப்பட்டிருக்கும் முன்னேற்பாடுகளைப் பார்க்கலாம்...

Last Updated : Jun 7, 2020, 04:00 PM IST
கொரோனாவுக்கு பின் திறக்கப்படும் கோயில்கள் பாதுகாப்பானதா? title=

கொரோனாவின் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக இரண்டரை மாதங்களுக்கும் மேலாக பூட்டப்பட்டிருந்த ஆலயங்களின் கதவுகள் தற்போது, பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளன.  கொரோனா நெருக்கடியில் இருந்து நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது.   நாட்டி ன் கிட்டத்தட்ட அனைத்து கோயில்களையும் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் முடிவடைந்துவிட்டன.   தலைநகர் டெல்லியின் பெரிய மற்றும் புகழ்பெற்ற ஆலயங்களுக்கும், மசூதிகளுக்கும் மக்கள் இனிமேல் செல்லலாம்.  அதற்கான முன்னேற்பாடுகள் முடிந்துவிட்டன.  முதலில்  டெல்லியின் புகழ்பெற்ற ஜண்டேவாலன் கோயிலுக்குச் சென்று, அங்கு செய்யப்பட்டிருக்கும் முன்னேற்பாடுகளைப் பார்க்கலாம்...

கொடியேந்திய கோமகளான அன்னை சக்தியின் ஜண்டேவாலன் கோயிலுக்கு நாள்தோறும்  ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து, அன்னையை வழிபடுவார்கள். தற்போது அன்னையை வணங்கும் பக்தர்கள் கொரோனாவின் ஆபத்தை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக, கோயிலின் ஒவ்வொரு பகுதியும் சுத்திகரிக்கப்பட்டுள்ளது… குறிப்பாக வாயிலில் உள்ள இரும்பு கிரில் கதவுகள் முதல் கோயில் வளாகம் முழுவதும் ரசாயனங்களைக் கொண்டு முழுமையான முறையில் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் ஆலயத்திற்குள் நுழைவதற்கு முன்பே, வாயிற்புறத்தில் இருக்கும் சேவகர்கள் தெர்மல் ஸ்கிரீனிங் செய்வார்கள் ... நிவேதனத்திற்காக பிரசாதங்களைக் கொண்டுவருவதற்கும் கோயிலில் கீழே விழுந்து வணங்குவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது ... கோயிலுக்கு வரும் பக்தர்கள் வழக்கமாக கோயில் மணியை அசைத்து வழிபடுவார்கள்.  மணிகளை தொடுவதால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், ஆலய மணிகள் துணியால் மூடப்பட்டிருக்கின்றன.  மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கொரோனா தொற்றுநோயைத் தடுக்கவும் ஆலயத்தில் மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகளைப் பற்றி எமது நிருபர் சுமித் அவஸ்தி விவரிக்கிறார் ...

கொரோனா காலத்தில் மக்களின் வாழ்க்கைமுறையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன… இனிமேல் கோயிலின் நடைமுறைகளும் சற்று மாறும். இப்போது டெல்லியில் உள்ள ஜண்டேவாலன் கோவிலில் இருக்கிறோம்… உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி நாடு முழுவதும் உள்ள மத தளங்கள் நாளை முதல் திறக்கப்படும்... ஜண்டேவலன் கோயிலில் ஏறக்குறைய சுத்திகரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன… அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன...    மக்கள் கோவிலுக்கு வரும்போது, ​​அவர்கள் முதலில் இந்த சுத்திகரிப்பு டனல் வழியாக செல்ல வேண்டும்… அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன… முற்றிலுமாக சுத்திகரிக்கப்பட்ட பின்னர் தான், மக்கள் கோவிலுக்குள் நுழைவார்கள் ... இதன் பிறகு நீங்கள் பார்க்கும் வட்டம்...   சுமார் ஒன்றரை அடி இடைவெளியில் இதுபோன்ற வட்டங்கள் போடப்படுள்ளன.  இந்த வட்டங்களுக்குள் தான் பக்தர்கள் நின்று அதன்படி செல்லவேண்டும்.. யாரும் முண்டியடித்துக் கொண்டு செல்ல முடியாது. ஒரே சமயத்தில் அதிகபட்சமாக 16 முதல் 17 பேர் தான் இடைவெளிவிட்டு வரிசையாக  செல்ல முடியும்.  குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மிக முக்கியமான விஷயம் கோயிலின் மணி… இங்கு இந்த ஆலய மணியை ஒரு சிவப்பு துணியால் மூடி வைத்திருக்கிறார்கள்.அதனால் யாரும் அதைத் தொட முடியாது. மணியை பலர் தொடுவதால்  கொரோனாவின் தொற்றுநோயை ஏற்படலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.  சமூக தொலைவை உறுதிப்படுத்துவது, தெர்மல் ஸ்க்ரீனிங் செய்வது கோயில் மணிகளை சிவப்பு துணியால் கட்டி வைப்பது என முன்னேற்பாடுகள் இங்கு செய்யப்பட்டுள்ளன.  

டெல்லியின் புகழ்பெற்ற மற்றுமொரு கோயிலான கல்காஜி காளி கோயிலுக்கு செல்வோம்.. இந்த பழங்கால கோவிலுக்கு பக்தர்கள் பெருமளவில் வருவது வழக்கமாம்.  தற்போது, பக்தர்களின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.... பக்தர்கள் தங்களை முழுமையாக சுத்திகரித்துக் கொண்டு அன்னையை தரிசிக்கலாம்.   கோயிலில் ஐந்து அடி நீளமுள்ள இரண்டு டனல்கள் நிறுவப்பட்டுள்ளன... இவை சுமார் ஐந்து அடி நீளமுள்ள மின்சார மோட்டாரால் இயக்கப்படுகின்றன... ஒரே நேரத்தில் இரண்டு பக்தர்கள் இந்த டனலின் வழியாகச் செல்லலாம். பக்தர்கள் செல்லும் போது, இந்த டனலிற்குள் சுத்திகரிப்பு மருந்துகள் பீய்ச்சியடிக்கப்படும்.  இதற்காக இரண்டு டனல்களிலும் தலா 500 லிட்டர் சுத்திகரிப்பு மருந்துகள் கொண்ட தொட்டிகள் நிரப்பி வைக்கப்பட்டுள்ளன.  இவற்றால் சுமார் ஆயிரம் மக்களை சுத்திகரிக்க முடியும் ...

கோயில் வாசலில் இருந்து கருவறை வரை சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளது... இதற்கான பணிகள் இன்னும் தொடர்கின்றன.  சிறப்பு தெளிப்பு இயந்திரம் மூலம் முழு வளாகத்திலும் சுத்திகரிப்பு நடைபெறுகிறது.     தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகளும் வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன ... கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தெர்மல் ஸ்க்ரீனிங்   செய்யப்படும் ... கோயில் வளாகத்தில் கூட்டம் கூட அனுமதியில்லை.   ஒரு சமயத்தில் 15 பக்தர்கள் மட்டுமே அன்னையை தரிசிக்க அனுமதி கொடுக்கப்படும்.  65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 10 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு ஆலயத்திற்கு வர அனுமதி கிடையாது.  வழக்கமாக இங்கு அன்னைக்கு சாற்றுவதற்காக கொண்டுவரப்படும் பிரசாதம், மோதிரங்கள், மணிகள்,  பூக்கள் போன்ற பொருட்களை கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   முகக்கவசம் அணியாத பக்தர்களுக்கு ஆலயத்திற்குள் செல்ல அனுமதி கிடையாது.  எனவே, தேவைப்படும் பக்தர்களுக்கு முகக்கவசம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.   

கோயில் நிர்வாகம் சார்பாக அரசாங்கம் வழங்கிய அனைத்து வழிகாட்டுதல்களையும் முறைகளும் பின்பற்றப்படுவதாக கோயில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.    வாயிலில் ஒரு சுத்திகரிப்பு டனல் இருக்க வேண்டும் என்ற அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப   சுத்திகரிப்பு டனல் அமைக்கப்பட்டுள்ளது. கைகளை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக சுத்திகரிப்பான்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தை சுத்தப்படுத்துவதற்கு துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்... கோயிலுக்குள் நுழையும் போது ஒருவருக்கொருவர் பரஸ்பர இடைவெளியை பராமரிப்பதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளும் முடிவடைந்துவிட்டன.   பக்தர்கள் கோயிலுக்குள் நுழையவும், தனிநபர் இடைவெளியை உரிய முறையில் கடைபிடிப்பதற்கும் ஏற்றவாறு வட்டங்கள் போடப்பட்டுள்ளது.     பக்தர்கள் அன்னையை நிம்மதியாக தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியின் தெற்குப் பகுதியில் சதர்பூரில் அமைந்துள்ள சதர்பூர் கோயில் அல்லது ஸ்ரீ ஆதி காத்யாயனி சக்தி பீடத்தை பக்தர்களின் தரிசனத்திற்காக திறப்பதற்கான ஏற்பாடுகள் முடிந்துவிட்டன... 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள டெல்லியின் பழமையான கோயில்களில் ஒன்று.  வெண் பளிங்கு கற்களைக் கொண்டு சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோயில், தென்னிந்திய கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.  இது நாட்டின் இரண்டாவது பெரிய கோயில் வளாகமாகும் ... துர்கை அன்னையின் இந்த கோயில் மிகவும் அழகாக இருக்கிறது ... கொரோனா நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த கோயிலும் மூடப்பட்டது, ஆனால் இப்போது அதை திறப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன ... முழு கோயில் வளாகத்திலும் துப்புரவு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன, மேலும் சமூக தூரத்தை பராமரிக்க சிறப்பு அடையாளங்களும் செய்யப்பட்டுள்ளன.  

நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் சத்தர்பூர் கோயிலுக்கு பக்தர்கள் வருகிறார்கள்... கொரோனா காலத்தில் அமைதியில் ஆழ்ந்துப்போன இந்த கோயில் இப்போது மீண்டும் பக்தர்களின் வருகையால் சலசலக்கப் போகிறது... அன்னை வாழ்க, என்ற முழக்கங்கள் மீண்டும் ஆலய வளாகத்தில் எதிரொலிக்கப்போகிறது.   பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் கூறுகிறது…

உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகத்திலிருந்து வழிகாட்டுதல்கள் வந்துள்ளன ... அதன் அடிப்படையில், நாங்கள் முன்னேற்பாடுகளைச் செய்துள்ளோம் ... தினசரி அடிப்படையில் கோயிலை சுத்தப்படுத்துகிறோம்.  அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை கோயிலை சுத்தப்படுத்துகிறோம் ... காலையில் சுத்திகரிப்பு செய்யப்படும் கோவில், மீண்டும் பிற்பகலிலும் சுத்தம் செய்யப்படும்.  தெர்மல் ஸ்க்ரீனிங் செய்யப்படாத எந்த பக்தர்களும் கோயிலுக்குச் செல்ல முடியாது ... தானியங்கி சுத்திகரிப்பு இயந்திரத்தை நிறுவியுள்ளோம் ... இதனால் முழு உடலும் சுத்திகரிக்கப்படுகிறது ... எனவே பக்தர்கள் இந்த சுத்திகரிப்பு டனல் வழியாக செல்லும்போது அவர்கள் கிருமிநாசினியால் சுத்திகரிக்கப்படுவார்கள்.

ஒட்டுமொத்தமாக, கொரோனா காலத்தில் மூடப்பட்ட ஆலயத்தின் கதவுகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும்.   கொரோனாவின் நெருக்கடியை சமாளிக்க மக்கள் தங்கள் பிரார்த்தனைகளை கடவுள்களிடம் முன்வைத்து சரணாகதியடைய ஆலயங்களுக்கு நிச்சயம் வருவார்கள்... பிரார்த்தனைகள் பக்தர்களின் தேவைக்கும், விருப்பத்திற்கும், காலத்திற்கும் ஏற்ப மாறுவது போல், இந்த முறை வழிபடும் பாணியும் மாறுகிறது என்றே சொல்லலாம். பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, ஒருவர் மீது மற்றொருவர் பரஸ்பரம் இடித்துக் கொள்ளாமல், தூரத்திலிருந்தே தங்கள் விருப்பமான கடவுளை தரிசனம் செய்வார்கள். கடவுளுக்கு அர்ப்பணிக்க, பூக்கள், மாலைகள் மற்றும் பிரசாதங்கள் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை.  கடவுளை தரிசித்து தங்கள் மனக்குறைகளையே நிவேதித்தால் போதும், வேண்டும் வரம் கிடைத்துவிடும் என்பதை இந்த கொரொனா தசாப்தம் சொல்லாமல் சொல்கிறதோ? 

(மொழியாக்கம்- மாலதி தமிழ்ச்செல்வன்)

Trending News