டயட் இருந்து உடல் எடையை குறைத்து உரிமையாளர் வீட்டில் கொள்ளையடித்த திருடன்!
குஜராத்தில் திருடன் டயட் இருந்து தனது உடல் எடையை குறைத்து வேலை பார்த்து வந்த உரிமையாளர் வீட்டிலேயே கொள்ளையடித்த சம்பவம் பேசு பொருளாகி உள்ளது.
குஜராத் : அந்த காலத்தில் திருடர்கள் எல்லாம் மரு வைத்துக்கொண்டு, கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் போன்றவற்றை பறிப்பதை தான் படத்தில் பார்த்திக்கிறோம். ஆனால் இப்போது உள்ள திருடர்களோ தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கேற்ப அவர்களின் திருட்டையும் மேம்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் குஜராத்தில் ஒரு திருடன் டயட் இருந்து தனது உடல் எடையை குறைத்து வேலை பார்த்து வந்த உரிமையாளர் வீட்டிலேயே கொள்ளையடித்த சம்பவம் பேசு பொருளாகி உள்ளது.
ALSO READ மனைவியின் தொந்தரவால் திருமணமான 1 வாரத்தில் தற்கொலை செய்த வாலிபர்!
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரை சேர்ந்தவர் சவ்ஹான், இவர் குஜராத் மாநிலத்தில் மோஹித் மராடியா என்பவரது வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அந்த பகுதியில் ரோஹித் தான் செல்வந்தர். இத்தனை ஆண்டுகளாக அவர் வீட்டில் வேலை பார்த்து வந்ததால் சவ்ஹானுக்கு அவரிடம் இருக்கும் பணம், நகைகள் குறித்தும், அவை வைக்கப்பட்டிருக்கும் இடம் குறித்தும் நன்றாக தெரியும். மேலும் அந்த வீட்டில் எப்போது ஆள்நடமாட்டம் இருக்கும், எந்த இடத்திலெல்லாம் கண்காணிப்பு கேமரா வைத்திருப்பார்கள், எந்த இடத்தில் வைத்திருக்கமாட்டார்கள், எந்த பாதை வழியாக சென்று எந்த பாதை வழியாக வரலாம் என்பது குறித்து அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தார்.
இதனையடுத்து குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைத்த அவர், குறிப்பிட்ட அந்த அறையில் வைக்கப்பட்டிருக்கும் பணம், நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டினார். உரிமையாளர் ரோஹித் வெளியூருக்கு சென்ற நிலையில் அந்த அறைக்கு கொள்ளையடிக்க சென்றார். ஆனால் அந்த பகுதியில் கேமரா இருந்தது. அதில் சிக்காமல் செல்ல வேண்டுமென்றால் ஒரு சிறிய ஜன்னல் வழியாக தான் உள்ளே நுழைய வேண்டும். இவர் அந்த ஜன்னல் வழியாக உள்ளே நுழைய முற்பட்டபோது, இவரது உடல் அளவு அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் தனது உடல் எடையை குறைக்க எண்ணியவர், கடந்த மாத காலங்களாக டயட் இருந்து அந்த ஜன்னலுக்குள் நுழையும் அளவிற்கு உடல் எடையை குறைத்துள்ளார். அதனையடுத்து எதிர்பார்த்தபடி ரோஹித் மறுபடியும் வெளியூர் சென்ற நிலையில், அந்த ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைந்து வைத்திருந்த நகை, பணம் என மொத்தம் ரூ.37 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்துக்கொண்டு சென்றார்.
வீட்டிற்கு திரும்பிய ரோஹித், திருட்டு நடந்ததை கண்டு அதிர்ந்து, போலீசில் புகார் அளித்தார். போலீசார் சோதனையிட்ட போது ஒரு புதிய கட்டர் ஒன்று கிடைத்துள்ளது. அதில் கடையின் பெயர் மற்றும் விலையுடன் சேர்த்து பார் கோடும் இருந்துள்ளது. அதனை வைத்து கடைக்கு சென்று குறிப்பிட்ட அந்த தேதிகளில் யாரெல்லாம் கட்டர் வாங்கியது என்பதை CCTV-யில் கண்காணித்த போது சவ்ஹான் வாங்கியது தெரிய வந்தது. அதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணையை தொடங்கினார். அப்போது தான் திருட்டுக்காக அவர் டயட் இருந்து உடல் எடையை சுமார் 10 கிலோ வரை குறைத்து திருடியது தெரியவந்தது.
ALSO READ திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் மீது ஆசிட் வீசிய பெண்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR